கரும்பு தின்ன கூலி வேண்டுமா.. இந்த பழமொழியினை பலரும் கேட்டிருக்கலாம். சுவையான கரும்பினை சாப்பிட வெகுமதி வேறு வேண்டுமா? அப்படியிருக்க அதை உண்ணக்கூட கூலி கேட்கலாமா? ஆனால் அப்படி ஒரு சம்பவம் தான் கனடாவில் நடந்துள்ளது.
கனடாவில் உள்ள மிட்டாய் பிரியர்கள் தங்களது வேலையினை விடுத்து, கேண்டி ஃபண்ஹவுஸின் வாய்ப்பினை பயன்படுத்தலாம்.
ஏனெனில் கேண்டி ஃபண்ஹவுஸின் ஆஃபர் அதுபோல.
டிசிஎஸ்,விப்ரோ, ஹெச்சிஎல் கொடுத்த முக்கிய அப்டேட்.. அட்ரிஷன், சம்பளம், WFH.. இதோ முக்கிய விவரங்கள்!
தலைமை கேண்டி அதிகாரி
சாக்லேட் பார்கள் முதல் லைகோரைஸ் வரையிலான இனிப்பான தின்பண்டங்களை விற்பனை செய்யும் ஆன்லைன் விற்பனையாளரான, கேண்டி ஃபண்ஹவுஸ், ஒரு சுவாரஸ்யமான அறிவிப்பினை கொடுத்துள்ளது. அது இந்த நிறுவனம் தலைமை கேண்டி அதிகாரியினை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
சம்பளம்
இந்த தலைமை கேண்டி அதிகாரிக்கு 1,00,000 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 61.14 லட்சம் ரூபாய் ) சம்பளமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்ன எனில் இது வீட்டில் இருந்து பணிபுரியும் நிலை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு இனிப்பான செய்தி என்றே கூறலாம்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ஜூலை மாதம் லிங்க்ட் இன் மூலம் அறிவிக்கப்பட்ட இந்த வாய்ப்பானது, தலைமை சுவை மேலாளர் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியது. இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், பெற்றோரின் அனுமதியுடன் 5 வயதிற்குமேற்பட்ட விண்ணப்பதார்களுக்கு இந்த அறிவிப்பானது வந்துள்ளது. ஆக நீங்கள் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தை எனில், நீங்கள் அதிர்ஷ்டவசமானவர் தான்.
பலத்த வரவேற்பு
இந்த அறிவிப்புக்கு நிறுவனம் பலத்த வரவேற்பு இருப்பதாகவும் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஜமில் ஹெஜாசி கூறியுள்ளார். எனினும் சில சுவாரஸ்ய அழைப்புகளையும் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். ஒரு தலைமை மிட்டாய் அதிகாரி ஒரு மாதத்திற்கு 3500 மிட்டாய்களை சாப்பிட வேண்டும். ஒரு நாளை சுமார் 117 மிட்டாய் சாப்பிட வேண்டியிருக்கும் என கூறுகிறார்.
பலரும் ஆர்வம்
இந்த வேலைக்கு பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரையில் ஆர்வம் காட்டி வருகின்றனராம். பல குழந்தைகள் இதற்கான விண்ணப்பித்தினை நிரப்புவதை வீடியோக்கள் எடுத்து பலரும் ஆன்லைனில் வெளியிட்டும் வருகின்றனர்.
61 lakh salary to eat candy? Canada Company Super announcement
61 lakh salary to eat candy? Canada Company Super announcement/கரும்பு தின்னக் கூலி.. அதுவும் 61 லட்சம்..!