வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கடந்த 2018 -19 ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.42,499 கோடி மதிப்புக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் ராஜ்யசபாவில் அளித்த பதில்: கடந்த 2021- 22 நிதியாண்டில் 12,815 கோடி ரூபாய்க்கு பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த நிதியாண்டில் ரூ.1,387 கோடி ஆக ஏற்றுமதி உள்ளது.
கடந்த 2018 -19 நிதியாண்டில் ரூ.10,746 கோடியாக இருந்த ஏற்றுமதி அடுத்த ஆண்டில்(2019-20) ரூ.9,116 கோடியாக குறைந்தது. 2020-21 நிதியாண்டில் ரூ.8,435 கோடி ஆக குறைந்தது. 61 நாடுகளுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் சிறப்பு ரசாயனங்கள், உயிரினங்கள், பொருள்கள், கருவிகள், தொழில்நுட்பங்கள் என 6 வகைப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.
மற்றொரு கேள்விக்கு அஜய் பட் அளித்த பதிலில், பாதுகாப்பு துறையில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு தொடர்ச்சியாக கொள்கை முயற்சிகளை எடுத்துள்ளது. பாதுகாப்பு பொருட்கள் கொள்முதல் நடைமுறைப்படி, ரூ.100 கோடி வரையிலான ஒப்பந்தங்கள் குறிப்பிடத்தக்க சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது எனவும் கூறினார்.
இந்தியாவின் ஆப்செட் கொள்கைப்படி, வெளிநாட்டு பாதுகாப்பு நிறுவனங்கள், ரூ.2 ஆயிரம் கோடி அல்லது அதற்கு மேற்பட்ட ஒப்பந்தங்களில், அதில், இந்தியாவில், மொத்த மதிப்பில் 30 சதவீதத்தை உபகரணங்கள், தொழில்நுப்டங்கள் பரிமாற்றம், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்காக செலவு செய்ய வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக, உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு மே மாதம், பாதுகாப்பு துறையில், ஆட்டோமெட்டிக் முறையில், வெளிநாட்டு அந்நிய முதலீட்டுக்கான உச்ச வரம்பை 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement