ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள தனிப்பட்ட இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பிலியந்தலை மற்றும் நாரஹேன்பிட்டி பிரதேசங்களில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 மற்றும் 22 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் ,அவர்கள் மடபான மற்றும் கொழும்பு 05 பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.