பெங்களூரு : முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர் தலைமையில், சட்டசபை தேர்தல் வாக்குறுதிகள் தயாரிக்கும் மூன்று பேர் கொண்ட கமிட்டியை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று அமைத்தார்.கர்நாடகாவில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., ஆகிய மூன்று கட்சியினருமே தயாராகி வருகின்றனர்.
ம.ஜ.த., சார்பில், முன்னாள் முதல்வர் குமாரசாமி, ஏற்கனவே ஒரு முறை மாநில சுற்றுப்பயணத்தை முடித்து விட்டார். இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் கடந்த மாதம் ஆரம்பித்தார்.பா.ஜ., சார்பில் இன்னமும் அதிகாரபூர்வமாக பிரசாரம் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால், ஆளுங்கட்சி என்பதால் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தி வருகிறது.காங்கிரஸ் சார்பில், மேலிட செயலர்கள், பிரசார கமிட்டி தலைவர் நியமிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், சட்டசபை தேர்தல் வாக்குறுதிகள் தயாரிக்கும் மூன்று பேர் கொண்ட கமிட்டியை, அக்கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா நேற்று அமைத்தார்.முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர் தலைவராகவும்; முன்னாள் எம்.எல்.ஏ., மது பங்காரப்பா, பேராசிரியர் ராதாகிருஷ்ணா ஆகியோர் துணை தலைவராகவும் கமிட்டியில் இடம் பெற்றுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement