2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற இருந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.
இந்தத் தொடரில் பிரதான போட்டியில் விளையாடும் ஆறு அணிகள் A , B என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
A பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் இடம்பெறும்.
B பிரிவில் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் ஒருமுறை மோதும்.
முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.
அதில் லீக் வடிவில் மீண்டும் ஒவ்வொரு அணியும் மோதும். அதிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.
PC: AFP
இந்தத் தொடரில் விளையாட ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் தகுதிச்சுற்றில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
போட்டி அட்டவணை
பிரிவு A
-
இந்தியா – பாகிஸ்தான், ஆகத்து 28 (துபாய்)
- இந்தியா – தகுதிச்சுற்று அணி, ஆகத்து 31 (துபாய்)
- பாகிஸ்தான் – தகுதிச்சுற்று அணி, செப்டம்பர் 2 (ஷார்ஜா)
பிரிவு B
- இலங்கை – ஆப்கானிஸ்தான், ஆகத்து 27 (துபாய்)
- வங்கதேசம் – ஆப்கானிஸ்தான், ஆகத்து 30 (ஷார்ஜா)
- இலங்கை – வங்கதேசம், செப்டம்பர் 1 (துபாய்)
இறுதிப்போட்டி, செப்டம்பர் 11 (துபாய்)
Get ready to witness Asia’s best, battling it out to become Asia’s best!🔥👊
Here’s how this year’s Men’s #AsiaCup2022 is lined up. pic.twitter.com/g2SK2UnlhO— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) August 2, 2022