இந்தியாவிட்டு வெளியேறுங்கள்.. மத்திய அரசு 81 பேருக்கு நோட்டீஸ்..!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ பல்வேறு பண மோசடிகள் செய்ததாக அமலாக்க துறை சில வாரங்களுக்கு முன்பு பல இடத்தில் சோதனை செய்த போது, விவோ நிறுவனத்திற்குத் தொடர்புடைய ஹிமாச்சலப் பிரதேசத்தை மாநிலத்தைச் சேர்ந்த சோலன் என்னும் நிறுவனத்தின் சீன இயக்குநர்கள் இருவர் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

சோலன் என்னும் நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவரும் சீன நாட்டவர்கள், போலி ஆவணங்கள் மூலம் இந்திய நிறுவனங்களில் இயக்குநர்களாக ஆக்கப்பட்டுள்ளனர் எனப் பிஸ்னஸ் இன்சைடர் தெரிவித்தது.

இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியை அளித்த நிலையில் தற்போது மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் முக்கியமான விபரத்தை மக்களவையில் இன்று தெரிவித்துள்ளார்.

5ஜி சேவை எப்போ? கெத்து காட்டும் ஜியோ, ஏர்டெல் விட 2 மடங்கு அதிகம்.. அதானி ஏமாற்றம்..?

சீனர்கள்

சீனர்கள்

மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் செவ்வாய்க் கிழமை பேசுகையில் 2019 முதல் 2021 வரையில் சுமார் 81 சீன பிரஜைகளுக்கு ‘இந்தியாவை விட்டு வெளியேற’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், விசா விதிமுறைகளை மீறியதற்காகச் சீனாவை சேர்ந்த மேலும் 117 பேரை நாட்டை விட்டு கட்டாயப்படுத்தி Deport செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.

விசா நிபந்தனைகள்

விசா நிபந்தனைகள்

விசா நிபந்தனைகளை மீறியதற்காகவும் மற்றும் பிற சட்டவிரோத செயல்களுக்காகவும் கிட்டத்தட்ட 726 சீன பிரஜைகள் ‘adverse list’ சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் கூறினார்.

பல காரணங்கள்
 

பல காரணங்கள்

மத்திய அரசு இந்தியாவுக்குள் வரும் சீன நாட்டவர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டினரின் ஆவணங்களையும், இந்திய பயணங்கள் குறித்த விபரங்களைச் சேமித்து வைத்துள்ளதாக நித்யானந்த் ராய்க் கூறினார். மேலும் பல வெளிநாட்டவர்கள் மருத்துவக் காரணங்கள் மற்றும் இதர பர்சனல் காரணங்களுக்காகவும் விசா காலம் முடிந்தும் பலர் வெளியேறாமல் இருந்துள்ளனர்.

விசா காலம்

விசா காலம்

இப்படி விசா காலம் முடியும் வெளியேறாமல் இருக்கும் வெளிநாட்டவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டும், உண்மையான காரணங்களைக் கண்டறிந்து தேவைப்படுமாயின் விசா காலம் நீட்டிக்கப்பட்டும் உள்ளதாகவும் நித்யானந்த் ராய்க் கூறினார். விசா காலம் தாண்டி இந்தியாவில் இருந்தால் Foreigners Act 1946 சட்டத்தின் கீழ் குற்றமாகும்.

தமிழ்நாடு வேற லெவல்.. ஆனா குஜராத்-ஐ முந்தவில்லை..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indian govt 81 Chinese nationals given ‘Leave India’ notice

Indian govt 81 Chinese nationals given ‘Leave India’ notice இந்தியாவைவிட்டு வெளியேறுங்கள்.. மத்திய அரசு 81 பேருக்கு நோட்டீஸ்..!

Story first published: Tuesday, August 2, 2022, 20:54 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.