உடுப்பி : ”அரசு அல்லது இந்துத்வா குறித்து, கேள்வி எழும் போது நாங்கள் அரசை ஓரங்கட்டி, இந்துத்வாவை தேர்வு செய்து கொள்வோம்,” என மின்சாரத்துறை அமைச்சர் சுனில்குமார் தெரிவித்தார்.இது குறித்து, உடுப்பியில் நேற்று அவர் கூறியதாவது:ஷியாம் பிரசாத் முகர்ஜி பதவியை விட்டு விலகியே, ஜனசங்கம், பா.ஜ., வை ஆரம்பித்தார். மாநிலத்திலும் இந்துத்வாவை அடிப்படையாக கொண்டு, அரசு நடத்துகிறோம்.
பசுவதை தடை சட்டம், மதம் மாற்றம் தடை சட்டங்களை, கொண்டு வந்துள்ளோம்.அரசு அல்லது இந்துத்வா குறித்து, கேள்வி எழும் போது நாங்கள் அரசை ஓரங்கட்டி, இந்துத்வாவை தேர்வு செய்து கொள்வோம்.சிறிய எதிர்ப்புக்காக, மனம் தளர்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. பிரவீன் கொலை வழக்கில், போலீசாருக்கு முக்கியமான தடயம் கிடைத்துள்ளது. விசாரணையில் அரசு தலையிடாமல், சுதந்திரமாக விசாரணை நடத்த வாய்ப்பளித்துள்ளது.
சம்பவ இடத்தில், ஏ.டி.ஜி.பி., முகாமிட்டு, பல கோணங்களில் விசாரணை நடத்துகிறது. கண்காணிப்பு கேமராக்களில் காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகள் கண்டுப்பிடிக்கப்படுவர்.பா.ஜ., மீது தொண்டர்கள் கோபமடைவது சரியல்ல என, நாங்கள் கூறவில்லை. குடும்பத்தில் சிறு, சிறு அதிருப்தி இருப்பது சகஜம். தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். அவர்களுக்கு அறிவுரை கூறுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement