வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க பார்லி. சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றடைந்தார். அவருக்கு தைவான் ராணுவம் பாதுகாப்பு அளித்து.
கடந்த 1949ல் நடந்த உள்நாட்டு போரைத் தொடர்ந்து, சீனாவும், தைவானும் பிரிந்தன. இரு நாடுகளுக்கும் அதிகாரப்பூர்வ உறவு இல்லையெனினும், சீனா தைவான் நாட்டை சொந்தம் கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க பார்லி., சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு செல்ல திட்டமிட்டுள்ளது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து சீன அதிபர் ஜிங்பிங், நான்சி பெலோசி தைவான் வருகையை அனுமதிக்க முடியாது. நெருப்புடன் விளையாடுவோர், சாம்பலாகிப் போவது உறுதி. என, அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம், ஜிங்பிங் தெரிவித்துள்ளார்.
தைவான் சென்றடைந்தார் பெலோசி
இந்நிலையில் நான்சி பெலோசி தனது ஆசிய சுற்றுப்பயணத்தை துவக்கி முதற்கட்டமாக சிங்கப்பூர் பிரதமரை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் இந்திய நேரப்படி இன்று இரவு 8.15 மணிக்கு நான்சி பெலோசி, தைவான் வந்திறங்கினார். அவரை தைவான் அரசு உயரதிகாரிகள் வரவேற்றனர்.தைவானின் தைப்பி வந்தடைந்த பெலோசிக்கு தைவான் ராணுவ பாதுகாப்பு அளித்து வருகிறது. தலைநகர் தைப்பி நகரின் கிராண்ட் ஹைத் என்ற இடத்தில் அங்கு தங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் கடும் எச்சரிக்கையை மீறி நான்சி பெலோசி தைவான் சென்றடைந்ததால், சீனா – தைவான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சர்வேசத அளவில் பரபரப்பான செய்தியாகியுள்ளது.
இதற்கிடையே நான்சி பெலோசியின் பாதுகாப்பிற்காக 13 அமெரிக்க போர்விமானங்கள் ஜப்பானிலிருந்து தைவானின் தைப்பி நகர் வந்தடைந்தன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement