இந்திய வர்த்தகச் சந்தையில் பல துறையில் இயங்கி வரும் ஐடிசி லிமிடெட் தனது வர்த்தகப் போர்ட்போலியோ மறு ஆய்வு செய்ததைத் தொடர்ந்து லைப்ஸ்டைல் ரீடைல் வணிகத்தில் இருந்து வெளியேறியதாகச் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் ரீடைல் வணிகத்தில் ஐடிசி நிறுவனம் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் வில்ஸ் லைஃப்ஸ்டைல் பிராண்ட் வாயிலாக நுழைந்தது. இந்தப் பிராண்டின் கீழ் பார்பல், கேஷவல், ஈவினிங், மற்றும் டிசைனர் ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு ஆடைகளை விற்பனை செய்தது.
ஐடிசி நிறுவனம்
ஐடிசி நிறுவனம் தனது லைப்ஸ்டைல் ரீடைல் வணிகத்தின் கீழ் ஜான் ப்ளேயர்ஸ் பிராண்டையும வைத்துள்ளது. இந்தப் பிராண்டின் கீழ் ஆண்களுக்கான ஆடைகளை விற்பனை செய்து வந்தது. ஜான் ப்ளேயர்ஸ் பார்பல், கேஷவல், டெனிம் மற்றும் ஆக்சஸரீஸ் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது.
லைப்ஸ்டைல் வர்த்தகம்
2019 ஆம் ஆண்டில், ஐடிசி நிறுவனம் தனது லைப்ஸ்டைல் வர்த்தகத்தை மறுசீரமைப்புச் செய்ய முடிவு செய்து தொடர்ந்து வர்த்தகம் மற்றும் ஆப்ரேஷன்ஸ்-ஐ குறைத்து வந்தது. ஜான் பிளேயர்ஸ் பிராண்டை வெளியிடப்படாத தொகைக்கு ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு விற்றது குறிப்பிடத்தக்கது
சஞ்சீவ் பூரி
கடந்த மாதம் ஐடிசி தலைவர் சஞ்சீவ் பூரி, ஒரு சில கடைகளில் எஞ்சியிருக்கும் வில்ஸ் பிராண்டின் பழைய சரக்குகளை நிறுவனம் நீக்குவதாகவும், மேலும் வணிகத்தைத் தொடர எந்தத் திட்டமும் இல்லை என்றும் கூறினார்.
வெளியேற்றம்
ITC தனது லைஃப்ஸ்டைல் ரீடைல் வர்த்தகம் e-commerce ஆதிக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டதாக்க ஏற்கனவே கூறியது. இதன் மூலம் ஐடிசி நிறுவனம் லைப்ஸ்டைல் ரீடைல் வணிகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.
ஈகாமர்ஸ் நிறுவனங்கள்
ஈகாமர்ஸ் நிறுவனங்கள் அதிகத் தள்ளுபடிகள் மற்றும் பிரத்யேக லேபிள்கள் மற்றும் தொடர்ந்து புதிய பிராண்டுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் நுகர்வோர் மத்தியில் பழைய பிராண்டுகளான வில்ஸ் லைஃப்ஸ்டைல், ஜான் ப்ளேயர்ஸ் ஆகியவற்றால் வர்த்தகச் சந்தையில் தாக்குப்பிடிக்க முடியாமல் வாடிக்கையாளர்களையும், வர்த்தகத்தையும் இழந்துள்ளது.
ITC officialy exits from lifestyle retailing business from August 2
ITC officialy exits from lifestyle retailing business from August 2 ஐடிசி திடீர் அறிவிப்பு.. ‘இந்த’ வர்த்தகத்தை மூடுகிறதாம்..!