சென்னை
சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை காரணமாக திருநெல்வேலி, கன்யாகுமரி தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்(சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது.
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக 3 நாட்களுக்குக் கன மழை பெய்யலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளாது. குறிப்பாகத் திருநெல்வேலி, தென்காசி, கன்யாகுமரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
இதையொட்டி தமிழகக் காவல்துறை பேரிடர் மீட்புக் குழுவினர் 30 பேர் நெல்லை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கையாகத் தயார் நிலையில் உள்ளனர். அம்பாசமுத்திரில்த்தில் மழை காரணமாக வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கேரளா மற்றும் அதனை ஒட்டி உள்ள நீலகிரி மாவட்டத்தில் நாளையும், நாளை மறுநாளும் கன மற்றும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருப்பதால் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதையடுத்து அம்மாவட்ட ஆட்சியரின் வேண்டுதலின்படி நீலகிரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலம் செல்லும் அனைத்து வாகனங்களும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வரும் 3 நாட்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது.