Oppo A77 Price: புதிய போன் வாங்குபவர்களின் விருப்பம் அறிந்து ஒப்போ நிறுவனம் புதிய 5ஜி போனை இந்திய சந்தைக்குள் கொண்டுவந்துள்ளது. ஒப்போ அதன் ‘A’ தொடரை விரிவுபடுத்தி புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் ஒப்போ ஏ77 5ஜி ஸ்மார்ட்போனை பல அம்சங்களுடன் வெளியிட்டுள்ளது.
இந்த போன் பட்ஜெட் விலையில் உள்ளது. இதில் எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே, மீடியாடெக் சிப்செட், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், சக்திவாய்ந்த பேட்டரி ஆகியவை உள்ளது.
புதிய 5ஜி ஒப்போ மொபைல் வாடிக்கையாளர்களுக்கு 5ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் ஆதரவை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை, அம்சங்கள் குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
TikTok: வருகிறது டிக்டாக் மியூசிக்; அழுத்தத்தை தாங்குமா ஸ்பாடிஃபை?
ஒப்போ ஏ77 விலை (Oppo A77 Price in India)
சில்லறை விற்பனை கடைகளை குறிவைத்து களமிறக்கப்பட்டுள்ள ஒப்போ ஏ77 5ஜி போனின் விலை ரூ.15,499 என்று ட்வீட் செய்துள்ளார். இந்த போன் ஓஷன் ப்ளூ, மிட்நைட் பிளாக் ஆகிய இரண்டு வண்ண தேர்வுகளில் கிடைக்கும்.
மேலதிக செய்தி:
Jio 5G: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி; மலிவு விலையில் 5ஜி திட்டங்கள் கிடைக்குமாம்!
இந்த போன் அனைத்து ஆஃப்லைன் சந்தைகளிலும் உள்ள அதிகாரப்பூர்வ சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆன்லைனில் இந்த போன் விற்பனைக்குக் கொண்டுவரப்படுமா என்பது குறித்து நிறுவனம் தகவல் வெளியிடவில்லை.
ஒப்போ ஏ77 அம்சங்கள் (Oppo A77 Specifications)
திரை:
720×1612 பிக்சல் தெளிவுத்திறனை கொண்ட 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடன் வரும் 6.56 அங்குல எச்டி+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
சிப்செட்:
மீடியாடெக் டிமென்சிட்டி 810 ஆக்டா-கோர் 5ஜி புராசஸர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம், 5ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவும் கிடைக்கும். ஃபோனில் 128ஜிபி ஸ்டோரேஜ் மெமரி உள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இதனை நீட்டிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
மென்பொருள்:
ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட கலர் ஓஎஸ் 12 ஸ்கின் மூலம் போன் இயக்கப்படுகிறது.
Jio Recharge: ஜியோ ரீசார்ஜுக்கு அமேசான் பே வழங்கும் ரூ.200 தள்ளுபடி!
கேமரா:
போனின் பின்பக்க பேனலில் இரட்டை கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.
பேட்டரி:
போனை அதிக சக்தி வாய்ந்ததாக மாற்ற 33W ஃபாஸ்ட் சார்ஜ் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 5000mAh பேட்டரி இந்த போனில் நிறுவப்பட்டிருக்கும்.