மக்களின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் விரைவாக தீர்வு வழங்க வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சின் கீழ் இருக்கும் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (01) சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அமைச்சை நோக்கியும் அமைச்சின் நிறுவனங்களை நோக்கியும் பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு, சட்ட ரீதியாகவும், அவர்களுக்கு வழிகாட்டலைச் செய்யக்கூடியவகையிலும், முடியுமானவரை சாதகமாகவும், விரைவாகவும் அதிகாரிகள் தீர்வுகளை வழங்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
நெருக்கடிகளுக்கு மத்தியில் கடற்றொழிலை அல்லது நன்னீர் மீன் வளர்ப்பு தொழில்களைச் செய்ய முன்வரும்போது அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அதிகாரிகள் அரப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கடற்றொழில் அமைச்சர் நிறுவனப் பிரதானிகளிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.