
ஈழத் தமிழ் பாடகியை தனது இசையில் பாட வைத்த டி .இமான்
பிரபுதேவா, ரைசா வில்சன், வரலட்சுமி, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பொய்க்கால் குதிரை. ஆகஸ்ட் 5ஆம் தேதி திரைக்கு வரும் இந்த பொய்க்கால் குதிரை படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை அமைப்பாளர் டி .இமான் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொய்க்கால் குதிரை படத்திற்காக ஈழ தமிழ் பாடகி ஆஷ்னா சசிகரன் என்பவரை பாட வைத்துள்ளேன். தற்போது அவர் இங்கிலாந்தில் இருக்கிறார். கார்க்கி எழுதி எனது இசையில் ஆஷ்னா சசிகரன் பாடிய அந்த பாடல் இன்று வெளியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பும் தனது இசையில் பல திறமை வாய்ந்த புதிய பாடகர்- பாடகிகளை டி. இமான் அறிமுகம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.