
பட வாய்ப்பு : மல்லிகா ஷெராவத் பரபரப்பு தகவல்
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான மல்லிகா ஷெராவத் . தமிழில் கமல் நடித்த தசாவதாரம் படத்தில் வில்லியாக நடித்தவர், சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். அதோடு ஜாக்கி சான் நடித்த ஹாலிவுட் படத்திலும் நடித்தார். இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் ஆர்கே என்றொரு படத்தில் நடித்துள்ளார் மல்லிகா ஷெராவத். இந்த நிலையில் ஹீரோக்களின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவர்கள் தனக்கு பட வாய்ப்பு தரவில்லை என்று ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டு இருக்கிறார்.
மல்லிகா கூறுகையில், ‛‛ஹீரோக்கள் தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நடிகைகளை தான் விரும்புகிறார்கள். எந்த நடிகை அவர்களுடன் சமரசம் செய்கிறாரோ அவருக்கு வாய்ப்பு. அவர் உட்காரு, எழு என்று எது சொன்னாலும் செய்ய வேண்டும். நள்ளிரவில் வீட்டுக்கு அழைத்தாலும் செல்ல வேண்டும். அப்படி சென்றால் அவர்களுக்கு பட வாய்ப்பு இருக்கும். நான் இதுபோன்ற சமரசங்களுக்கு உடன்பட மாட்டேன். இதனால் பட வாய்ப்புகளை இழந்தேன். ஆனாலும் தொடர்ந்து நான் படங்களில் நடிக்கிறேன்'' என்கிறார்.
மல்லிகா வெளிப்படையாக தெரிவித்துள்ள இந்த கருத்து பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.