கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் காணாமல் போன +2 மாணவிகள் இரண்டு பேர் போலீசாரின் உதவியால் 24 மணிநேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அங்குள்ள களமருதூர் கிராமத்தை சேர்ந்த ஒரு மாணவியும், கீழ்குப்பம் கிராமத்தை சேர்ந்த மற்றொரு மாணவியும் நேற்று பள்ளிக்கு வரவில்லை என தகவல் வந்ததால், பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
இதன்படி தனிப்படை அமைத்து தேடிய போலீசார் தோழிகள் இருவரும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக பெற்றோரை அழைத்துக்கொண்டு சென்னை வந்த போலீசார்,மாணவிகளை மீட்டு உரிய விசாரணைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.