இன்றைய இளைஞர்கள் தாங்கள் காதலிக்கும் பெண்ணுக்காக எந்த லெவலுக்கு இறங்குவார்கள் என்பது பல உதாரணங்களில் இருந்து தெரிய வந்து உள்ளது. அந்த வகையில் பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலிக்காக விலை உயர்ந்த போன் வாங்க வேண்டும் என்பதற்காக மொபைல் போன் ஷோரூம் சென்றார்.
அவர் இரவு முழுவதும் ஷோரூமில் உள்ள பெண்கள் கழிவறையில் காத்திருந்து அதன் பின் செய்த செயல் போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மொபைல்போன் ஷோரூமில் அவர் என்ன செய்தார்? போலீசார் எப்படி அவருடைய திட்டத்தை கண்டு பிடித்தார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.
ஏர் இந்தியாவின் ஒரே ஒரு அறிவிப்பு… டோட்டல் மகிழ்ச்சியில் பைலட்டுக்கள்!
பெங்களூரு மொபைல்போன் ஷோரூம்
பெங்களூரு ஜே.பி. நாகா என்ற பகுதியில் உள்ள மொபைல்போன் ஷோரூமில் இருந்து 7 விலையுயர்ந்த மொபைல் போன்களை தனது காதலிக்கு பரிசளிப்பதற்காக 27 வயது இளைஞன் இரவு முழுவதும் பெண்கள் கழிவறையில் மறைந்திருந்து திருடியது அம்பலமானதால் தற்போது அந்த இளைஞர் சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.
பெண்கள் கழிவறை
பெங்களூரு எலக்ட்ரானிக் உபகரணங்கள் விற்பனை செய்யும் ஒரு ஷோரூமின் ஊழியர்கள் இரவு பணி முடிந்து கடையை மூடியபோது ஷோரூமின் பெண்கள் கழிவறையில் நைசாக 27 வயது இளைஞர் ஒருவர் நுழைந்து ஒளிந்து கொண்டார்.
7 மொபைல் போன்கள் திருட்டு
ஷோரூம் மூடப்பட்டு, ஊழியர்கள் வீட்டிற்கு சென்றவுடன் அந்த இளைஞர் கழிவறையில் இருந்து வெளியே வந்து ஷோரூமின் தரை தளத்திற்குச் சென்று, ஏழு விலையுயர்ந்த மொபைல் போன்களை எடுத்துக்கொண்டு மீண்டும் கழிப்பறையில் ஒளிந்து கொண்டார். இரவு முழுவதும் அவர் கழிப்பறையிலேயே இருந்துள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்ட திருட்டு
மறுநாள் ஷோரூம் திறக்கப்பட்டதும், ஊழியர்கள் பிஸியாக இருந்தபோது, கழிவறையில் இருந்து வெளியே வந்த அந்த நபர் தான் திருடிய மொபைல் போன்களுடன் சாமர்த்தியமாக வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் வெளியே நடந்து செல்லும் போது தற்செயலாக திருடப்பட்ட மொபைல் போன்களில் ஒன்று கீழே விழுந்ததை அடுத்து அவருடைய திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் அவர் அந்த இடத்தில் இருந்து தப்பித்துவிட்டார்.
காதலிக்காக திருட்டு
ஆனால் மொபைல் போன் ஷோரூமில் திருடிய மொபைல் போன்களில் ஒன்றை அந்த இளைஞர் பயன்படுத்த தொடங்கிய பின்னர், ஐஎம்இஐ எண்ணை கொண்டு காவல்துறை அந்த நபரை மிக எளிதாக பிடித்துவிட்டது. இந்த திருட்டை செய்தவர் அப்துல் முனாஃப் என்றும், தன்னுடைய காதலிக்கு விலை உயர்ந்த மொபைல்போனை பரிசாக கொடுக்க வேண்டும் என்பதற்காக திருடியதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியபோது, பீகார் மாநிலம் பூர்னியா பகுதியைச் சேர்ந்த முனாஃப், பி.டி.எம் லேஅவுட்டில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வந்தார். அவர் மங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண்ணை இன்ஸ்டாகிராமில் சந்தித்து காதலித்தார். காதலிக்கு விலையுயர்ந்த பரிசுகளை வழங்க விரும்பினார். அதற்காக மொபைல் போன்களை திருடுவது எப்படி என்று இணையத்தில் கற்று கொண்டு மொபைல் ஷோரூமுக்குள் நுழைந்தார்.
சிசிடிவி காட்சி
திட்டப்படி அவர் ஜே.பி.நகர் 2-ம் கட்டத்தில் உள்ள ஷோரூமுக்கு வாடிக்கையாளரை போல் தன்னை காட்டிக்கொண்டு, பெண்கள் கழிவறையில் பதுங்கியிருந்தார். இரவு முழுவதும் அவர் அங்கேயே கழித்ததாக அங்கிருந்த ஊழியர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தெரிய வந்தது. அந்த நபர் கழிவறையில் இருந்து வெளியே வந்து விலை உயர்ந்த செல்போன்களை திருடி செல்வதும் சிசிடிவி காட்சியில் தெரிய வந்தது. திருடப்பட்ட செல்போன்களின் மதிப்பு ரூ.5 லட்சம் என்றும் திருடப்பட்ட 6 மொபைல் போன்களையும் மீட்டு, திருட்டு வழக்கின் கீழ் நீதிமன்ற காவலில் அந்த நபரை வைத்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Bengaluru Thief Hides In Electronics Showroom Overnight, To Steal Mobile For Lover
Bengaluru Thief Hides In Electronics Showroom Overnight, To Steal Mobile For Lover | கண்ணை மறைத்த காதல்… பெங்களூரு மொபைல்போன் ஷோரூம் சென்ற காதலனின் விபரீத செயல்!