Infinix Smart 6 Plus Offers: முழு எச்டி+ டிஸ்ப்ளே, நீட்டிக்கப்பட்ட ரேம் அம்சம், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் ஆகிய சிறப்புகள் கொண்ட புதிய ஸ்மார்ட்போனை இன்பினிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தைக்கு கொண்டுவந்தது.
சமீபத்தில் நிறுவனம் வெளியிட்ட இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இது வெளிவந்துள்ளது. இதன் விலை ரூ.8,000க்கும் குறைவு என்பது கூடுதல் சிறப்பு.
Oppo A77 5ஜி போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்; வேறென்ன ஸ்பெஷல் இதுல இருக்கு?
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 பிளஸ் விலை (Infinix Smart 6 Plus Flipkart Price)
இன்று முதல் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 பிளஸ் மொபைல் விற்பனை Flipkart ஷாப்பிங் தளத்தில் தொடங்கியது. இந்தியாவில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 பிளஸ் மொபைலின் விலை ரூ.7,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அறிமுக சலுகை என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இது 3ஜிபி + 64ஜிபி வேரியண்டுக்கான விலை ஆகும். கிரிஸ்டல் வயலெட், சீ ப்ளூ, மிராக்கிள் பிளாக் ஆகிய மூன்று நிறத் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 பிளஸ் அம்சங்கள் (Infinix Smart 6 Plus Specifications)
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 பிளஸ் போனில் 6.82 அங்குல எச்டி+ திரை கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு டிராப் நாட்ச் உடன் வருகிறது. திரை விகிதம் 90.6 விழுக்காடு பகிரப்பட்டுள்ளது. டிஸ்ப்ளே ஆனது 440 நிட்ஸ் பிரைட்னஸை கொண்டுள்ளது.
இதில் 3ஜிபி ரேம் வழங்கப்படும். ஆனால், நீட்டிக்கப்பட்ட ரேம் அம்சத்துடன் 6ஜிபி வர தேவைக்கேற்ப இது விரிவடையும். மீடியாடெக் ஹீலியோ ஜி25 சிப்செட் மூலம் இது இயங்குகிறது. ஆண்ட்ராய்டு 12 (Go Edition) இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் நிறுவப்பட்டுள்ளது.
OnePlus: பட்ஜெட் விலை ஒன்பிளஸ் இயர்பட்ஸ் அறிமுகம் – 20 மணிநேர பேட்டரி ஆயுள்; பாஸ் பூஸ்ட் டிரைவர் இருக்கு!
ஸ்மார்ட்போனின் பின்பக்கம் 8 மெகாபிக்சல் முதன்மை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இது இரட்டை பிளாஷ் லைட்டுடன் வருகிறது. செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக இது 5 மெகாபிக்சல் கேமரா சென்சார் கொண்டுள்ளது.
மேலும், 4ஜி LTE, வைஃபை, ப்ளூடூத் போன்ற இணைப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் உள்ளது. மலிவு விலையில் முதல் செல்போன் பயனர்கள் இதை கருத்தில் கொள்ளலாம். புதிய மலிவு விலை இன்பினிக்ஸ் போனை 5000mAh பேட்டரி சக்தியூட்டுகிறது.
பெயர்இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 பிளஸ்கட்டமைப்புபாலிகார்பனேட்இயங்குதளம்ஆண்ட்ராய்டு 12 (Android GO)புராசஸர்மீடியாடெக் ஹீலியோ ஜி25 சிப்செட்திரை6.82 அங்குல எச்டி+ பேனல்பின்புற கேமரா8 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல்முன்புற கேமரா5 மெகாபிக்சல்ஸ்லாட்இரண்டு 4ஜி சிம்ரேம்3ஜிபிசேமிப்பகம்64 ஜிபிஆதரவுவைஃபை (5GHz), ப்ளூடூத் 5.0, டைப்-சி, ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம், 3.5mm ஆடியோ ஜாக்சென்சார்அக்செலெரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, கைரேகை, ப்ராக்ஸிமிட்டிஇடங்காட்டிஜிபிஎஸ்பேட்டரி5000mAhநிறங்கள்கிரிஸ்டல் வயலெட், சீ ப்ளூவிலைரூ.7,999வெளியீடுஜூலை 2022