குரங்கம்மை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு| Dinamalar

புதுடில்லி : குரங்கம்மை நோய் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: குரங்கம்மை பாதித்தவருடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. நோயாளிகள் பயன்படுத்திய துணிகள், படுக்கை போன்றவற்றை பிறர் பயன்படுத்தக் கூடாது. தொற்று பாதித்தவரை தனிமைப்படுத்த வேண்டும். மேலும் அடிக்கடி கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது. இத்தொற்று பாதித்தவர்களிடம் பாகுபாடு காட்டக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.