உலகின் அதிக கடன் கொண்ட 10 நாடுகள்.. லிஸ்டில் யாரெல்லாம் இருங்காங்க?

கடன் இல்லாத கஞ்சி கால் வயிறு போதும் என்ற பழமொழியினை பலரும் கேள்விபட்டிருக்கலாம். உண்மை தான் கடன் இல்லாதவர்கள் இன்றைய உலகின் முதல் பணக்காரர்கள் எனலாம். கடன் இல்லாமல் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு இருந்தால் கூட போதும் நினைப்பவர்கள் பலர். ஆனால் கடன் இல்லாமல் வாழ முடியுமா? என்றால் அது நிச்சயம் கேள்விக்குறி தான்.

உலகமே இன்று கடனில் தான் முழ்கி கிடக்கிறது என்றால் அது மிகையாகாது.

அதெல்லாம் சரி, உலகில் அதிக கடன் மிகுந்த நாடுகள் எது? ஜிடிபி விகிதத்தில் எவ்வளவு கடன் உள்ளது என்பதை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

கடன் செயலிகளுக்கு செக்.. நிர்மலா சீதாராமன் அதிரடி முடிவு..!

ஜப்பான்

ஜப்பான்

பரப்பளவில் குட்டி நாடாக இருந்தாலும் கடன் மதிப்பில் முதல் நாடாக உள்ளது ஜப்பான். இதன் கடன் மதிப்பு சுமார் 9087 டிரில்லியன் டாலராக உள்ளது. ஆசியாவின் மூன்றாவது பணக்கார நாடாக இருந்தாலும், கடனில் முதல் 10 இடங்களில் முதலிடத்தில் உள்ளது. ஜப்பானின் மிகப்பெரிய நம்பிக்கையே டெக்னாலஜி துறை தான். இது புதுமைகளை அதிகளவில் கண்டுபிடிக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ளது.

கீரிஷ்

கீரிஷ்

இரண்டாவதாக அதிகளவில் கடன் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் கிரீஷ் உள்ளது. இதன் கடன் மதிப்பு 379 பில்லியன் டாலராகும். பணக்கார நாடுகளில் ஒன்றாக இருக்கும் கிரீஷ், அதன் தனி நபர் வருமானம் 30,000 டாலர்களுக்கு மேலாக உள்ளது.

போர்ச்சுகல்
 

போர்ச்சுகல்

போர்ச்சுகல் நாட்டின் கடன் மதிப்பு சுமார் 264 பிலியன் டாலராகும். போர்ச்சுகலில் குறைந்த உற்பத்தி திறன் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. இது புதிய டெக்னாலஜிகளில் முதலீடு மிக குறைவாகும்.

இத்தாலி

இத்தாலி

இத்தாலியின் கடன் தொகை 2.48 டிரில்லியன் டாலராகும். இத்தாலியும் அதிக வருவாயினை கொண்ட நாடுகளில் இதுவும் ஒன்று. தனி நபர் வருவாய் சுமார் 24,742.01 டாலராகவும் உள்ளது. இது கடந்த 2007ல் 34,081.09 டாலராகவும் இருந்தது.

சைப்ரஸ்

சைப்ரஸ்

சைப்ரஸ் நாட்டின் கடன் மதிப்பு சுமார் 21.64 பில்லியன் டாலர் ஆக உள்ளது. சைப்ரஸின் தனி நபர் கடன் மதிப்பு 2020ல் 26,623.80 டாலராக இருந்தது. ஐரோப்பிய நாடுகளில் 16வது இடத்தில் உள்ள ஒரு நாடாகும்.

 பெல்ஜியம்

பெல்ஜியம்

பெல்ஜியத்தின் கடன் மதிப்பு அதன் ஜிடிபி-யில் சுமார் 456.18 பில்லியன் டாலராகும். பெல்ஜியன்ம் அதிக வருமானம் பெறக் கூடிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. இதன் வருமானம் பெரும்பாலும் சேவைத் துறையில் இருந்து பெறப்படுகிறது. இங்கு சராசரி சம்பள விகிதமே சுமார் 37,923 பவுண்டுகளாகும். ஐரோப்பாவிலேயே பெல்ஜியத்தில் தான் வரி விகிதம் அதிகமாகும்.

அமெரிக்கா

அமெரிக்கா

சர்வதேச அளவில் முன்னணி பொருளாதார நாடான அமெரிக்காவின் கடன் மதிப்பு 19.23 டிரில்லியன் டாலராகும். இதன் தனி நபர் வருமானம் சராசரியாக 2020ல் 63,416 டாலராகும். இங்கு வருமான, அதிகம் என்றாலும், செலவும் அதிகம். அமெரிக்காவில் வாழ்வாதார செலவினங்கள் மிக அதிகம்.

ஸ்பெயின்

ஸ்பெயின்

ஸ்பெயினின் கடன் மதிப்பு அதன் ஜிடிபி மதிப்பில் 1.24 டிரில்லியன் டாலர் ஆகும். இது தனி நபர் ஜிடிபி கேப்பிட்டா விகிதம் 30,116 டாலராகும். ஸ்பெயினின் வேலையின்மை விகிதம் 14.73% ஆகும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது வலுவான நாடுகளில் ஒன்றாகும்.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் கடன் மதிப்பு 254 பில்லியன் டாலராகும். தனி நபர் ஜிடிபி விகிதம், 59,797.75 டாலராகும். சிங்கப்பூரில் தனி நபர் வருமானம் 2020ல் சுமார் 86,480 டாலராகவும் இருந்தது. அதிக வருமானம் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். சிறந்த வணிகத் தளமாகவும் விளங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Top 10 debt to GDP ratio by country 2022

Top 10 debt to GDP ratio by country 2022/உலகின் அதிக கடன் கொண்ட 10 நாடுகள்.. லிஸ்டில் யாரெல்லாம் இருங்காங்க?

Story first published: Wednesday, August 3, 2022, 14:33 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.