தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் சாரதிகள், தமது வாகனத்திற்கு போதுமான அளவு எரிபொருள் இல்லையெனில், நெடுஞ்சாலையில் பயணிப்பதை தவிர்க்குமாறு அதிவேக நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பிரிவு கேட்டுக்கொள்கிறது.
அதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்,போதிய அளவு எரிபொருள் இல்லாத பட்சத்தில் வாகனங்கள் நுழையக்கூடாது’ என்ற டிஜிட்டல் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.