இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் செலவுகள் குறைக்கவும், ஊழியர்களைத் தக்கவைக்கவும், நாட்டின் பல பகுதிகளில் இருந்து புதிதாக ஊழியர்களைப் பணியில் சேர்க்க வேண்டும் என்பதற்காகப் பெரும் நகரங்களைத் தாண்டி 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்குத் தனது அலுவலகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
இதில் பெரு நிறுவனங்களைக் காட்டிலும் மிட் சைஸ் ஐடி சேவை நிறுவனங்கள் அதிரடியாகத் தென் மாநிலங்களில் இருக்கும் திறமையான ஊழியர்கள் மாணவர்களைக் கைப்பற்ற வேகமாக அலுவலங்களைத் திறந்து வருகிறது.
இதன் அடிப்படையில் சென்னையைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் டிஜிட்டல் சேவை நிறுவனம் மதுரையில் மிகப்பெரிய முதலீட்டு உடன் அலுவலகத்தைத் திறந்துள்ளது.
அமெரிக்காவில் இருந்தாலும் என் ஊரு திருநெல்வேலி தான்.. 1000 பேருக்கு ஐடி வேலை..!
மதுரை
மதுரை-யில் தற்போது பல ஐடி நிறுவனங்கள் அடத்தடுத்து அலுவலகத்தை அமைத்து வருகிறது. மதுரையில் மிகவும் பிரபலமாக இருக்கும் வடபழஞ்சி ஐடி பார்க்-ல் 8வது ஐடி மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான Optisol பிஸ்னஸ் சொல்யூஷன்ஸ் புதிய அலுவலகத்தைத் திறக்க உள்ளது.
5 கோடி ரூபாய்
மதுரை அலுவலகத்தைச் சுமார் 5 கோடி ரூபாய் முதலீட்டில் Optisol பிஸ்னஸ் சொல்யூஷன்ஸ் நிறுவுகிறது, ஏற்கனவே இந்நிறுவனம் மதுரையில் விஷால் டி மால் அருகில் அலுவலகத்தை வைத்திருக்கும் நிலையில் தற்போது வடபழஞ்சி ஐடி பார்க்-ல் புதிய அலுவலகத்தைத் திறக்க உள்ளது. இந்த அலுவலகம் மூலம் சுமார் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் எனத் தெரிகிறது.
Optisol பிஸ்னஸ் சொல்யூஷன்ஸ்
இதுகுறித்து Optisol பிஸ்னஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரான கார்திக் சந்திரன் டிவிட்டரில், மதுரை வேர்-ஐ விடாமல் பிடித்துக்கொண்டோம். மதுரையில் SEZ பகுதியில் 8 ஏக்கர் நிலத்தில் புதிய அலுவலகத்திற்காகத் திட்டத்தை முன்வைத்த நிலையில் இன்று ELCOT கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது எனக் கார்திக் சந்திரன் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு
இதுமட்டும் அல்லாமல் கடந்த வாரம் Optisol பிஸ்னஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மதுரை அலுவலகத்தில் 50 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிய நிலையில் இதற்கு 1200க்கும் மேற்பட்டவர் நேர்கானல் தேர்வில் பங்கு கொண்ட நிலையில் அதேநாளில் 29 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளதாக இந்நிறுவனம் தனது லின்கிடுஇன் தளத்தில் பதிவிட்டு உள்ளது.
டைடல் பார்க்
இந்நிலையில் Optisol பிஸ்னஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம் குறித்த டிவீட் டிரென்டான நிலையில் கமல் அலகர்சாமி என்பவர் இதன் மூலம் மதுரையில் ஐடி துறைக்கான ஸ்கோப் அதிகமாக இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் முதல்வர் மதுரையில் டைடல் பார்க் அமைக்க அறிவிப்பு வெளியிட வேண்டும் என முதல் அலுவலகம் ஹேட்டில், நிதியமைச்சர் பிடிஆர் ஹேண்டில் உட்படப் பலரை டேக் செய்துள்ளார்.
மதுரை, திருநெல்வேலி-க்கு ஜாக்பாட்.. அடுத்தடுத்து வரும் 3 ஐடி நிறுவனங்கள்..!
Optisol Business solutions expanding to madurai 8th IT firm in Vadapalanji IT Park
Optisol Business solutions expanding to madurai 8th IT firm in Vadapalanji IT Park மதுரை-க்கு வந்த புதிய ஐடி நிறுவனம்.. ஆரம்பமே அசத்தல்..!