தத்தி தத்திச் சென்று சாக்கடை கால்வாயில் மல்லாந்த மதுப்பிரியர்..! ஒரு இடத்தில் விழுந்து மறு இடத்தில் வெளியேறினார்

கிருஷ்ணகிரியில் கொட்டித்தீர்த்த கனமழைக்கு இடையே மது போதையில் தத்தி தள்ளாடி நடந்து வந்த மதுப்பிரியர் ஒருவர் கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்த வீடியோ வெளியாகி உள்ளது. முறையாக பராமரிக்கப்படாமல் உயிர்பலிவாங்கும் பெர்முடா முக்கோணம் போல ஊர் ஊருக்கு காட்சி அளிக்கும் பழைய கழிவு நீர் கால்வாய் விபரீதம் குறித்து எச்சரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகலில் சுமார் மூன்று மணி நேரமாக கன மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் ஓடிய வெள்ளம் சாலை ஓரங்களில் உயிர்பலிவாங்கும் பெர்முடா முக்கோணம்(Bermuda Triangle) போல பராமரிப்பில்லாமல் விடப்பட்ட கழிவு நீர் கால்வாய்க்குள் பாய்ந்து கொண்டு இருந்தது.

அடாத மழையிலும் விடாத போதையில் மதுப்பிரியர் ஒருவர் சாலையை தத்தி தள்ளாடி நடந்தபடி கடந்து வந்தார், அப்போது போதையின் வேகத்தால் ஒருபக்கமாக தள்ளாடிச்சென்று கால் தடுமாறி மழை நீர் பாய்ந்தோடிய கழிவுநீர் கால்வாயிக்குள் விழுந்தார்.

மதுப்பிரியர் உள்ளே விழுந்ததை சிலர் செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருக்க ஒரு இளைஞர் ஓடிச்சென்று அந்த கால்வாய்க்குள் இறங்கி கையை விட்டு தேடினார்.

ஆனால் உள்ளே விழுந்தவரை காணவில்லை, கையில் சிக்கவில்லை, உடனடியாக மழை நீரில் இழுத்துச்செல்லப்பட்டிருகால என்று சந்தேகித்து மற்றொரு இடத்தில் திறந்து கிடந்த கால்வாயை உற்று நோக்கிய போது உயிருக்கு போராடிய நிலையில் அந்த கால்வாயிக்குள் இருந்த மதுப்பிரியரை மீட்டு மல்லாக்க படுக்க வைத்து முதல் உதவி செய்தனர்.

உடனடியாக அவர் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தமிழகத்தில் பெரும் மழை காலம் தொடங்குவதற்கு முன்பாக இப்படி பாதுகாப்பில்லாமல் திறந்து கிடக்கும் கழிவு நீர் மற்றும் மழை நீர் கால்வாய்களை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் விரைந்து சீரமைக்க தவறினால் விபரீத உயிரிழப்புக்குகளுக்கு வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த விபத்தில் அந்த பாதசாரி அதிர்ஷடவசமாக உயிர்தப்பினாலும் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு வெகு நேரமானது.

அதே நேரத்தில் மழை நீரங்களில் மதுப்பிரியர்கள் சாலைகளில் தள்ளாடியபடி சுற்றித்திருந்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு கழிவு நீர் கால்வாய்க்குள் கவிழ்ந்த இந்த சம்பவமே சாட்சி..!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.