சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்வு.. 7வது நாள் மேஜிக் தொடருமா..?

மும்பை பங்குச்சந்தை வியாழக்கிழமை வர்த்தகம் துவங்கும் போது உயர்வுடன் துவங்கி 7வது நாள் தொடர் வளர்ச்சி பாதைக்கு வழி வகுத்து உள்ளது.

இந்த நிலையில் இன்று வர்த்தகம் உயர்வுடன் துவங்க ஆசிய சந்தையில் ஏற்பட்ட உயர்வும், ஐடி பங்குகளில் நேற்றைய வர்த்தகத்தில் பெற்ற அதிகப்படியான முதலீடுகளும் முக்கியக் காரணமாக உள்ளன.

அனைத்திற்கும் மேலாக 3ஆம் தேதி துவங்கிய ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. இக்கூட்டத்தில் ஆர்பிஐ தனது பென்சமார்க் வட்டியான ரெப்போ விகிதத்தைக் குறைந்தது 0.30 முதல் 0.50 சதவீதம் வரையில் உயர்த்திக் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டை எட்டும் எனக் கணிக்கப்படுகிறது.

இது முதலீட்டுச் சந்தையில் அதிகப்படியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதாலும் முதலீட்டாளர்கள் ஆர்பிஐ முடிவுகளைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sensex Nifty live updates on 04 august 2022: IT and Metal stocks shine; britannia dabur rbi policy

Sensex Nifty live updates on 04 august 2022: IT and Metal stocks shine; britannia dabur rbi policy சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்வு.. 7வது நாள் மேஜிக் தொடருமா..?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.