வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவில் நேற்று 17,135 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் சற்று அதிகரித்து 19,893 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,893 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,40,87,037 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 20,419 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,34,24,029 ஆனது. தற்போது 1,36,478 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கோவிட் காரணமாக 53 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,26,530 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 205.22 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 38,20,676 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement