பம்பை: பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழையுடன் மத்திய தெற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் சேர்ந்து கொண்டதால் கேரளா முழுவதும் மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் 10 மாவட்டங்களுக்கு ‛ரெட் அலெர்ட்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பம்பை நதியில் அபாயகரமான அளவுக்கு நீர் செல்வதால் பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாலை 6 மணிக்குள் சன்னிதானாத்தில் உள்ள அனைத்து பக்தர்களும் வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பம்பை: பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்