இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் ஒரே குடுபத்தைச் சேர்ந்த மூன்று பேரை அடுத்தடுத்து பாம்பு கடித்துள்ள சம்பவம் பெரும் ஆதரிசியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் சகோதரர்கள் இருவர் உயிரிழந்தனர், மற்றோரு உறவினர் அபாயகரமான நிலையில் உள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பாம்புக்கடியால் இறந்த தனது சகோதரரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த ஒருவர் தூக்கத்தில் பாம்பு கடித்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பவானிபூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை பாம்புக்கடியால் உயிரிழந்த அரவிந்த் மிஸ்ராவின் (38) இறுதிச் சடங்கு புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அவரது தம்பி கோவிந்த் மிஸ்ரா (22), புதன்கிழமை இரவு தூங்கிக்கொண்டிருக்கும்போது, அவரும் பாம்பு கடித்து உயிரிழந்தார்.
அதுமட்டுமின்றி, அதே வீட்டில் இருந்த குடும்பத்தின் உறவினர்களில் ஒருவரான சந்திரசேகர் பாண்டே (22) என்பவரையும் பாம்பு கடித்தது.
கோவிந்த் மிஸ்ரா உயிருந்த நிலையில், சந்திரசேகர் பாண்டே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோவிந்த் மிஷாரா மற்றும் சந்திரசேகர் பாண்டே இருவரும் அரவிந்த் மிஸ்ராவின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள பஞ்சாபி மாநிலம் லூதியானாவில் இருந்து பவானிபூர் கிராமத்திற்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கிராமத்திற்கு மூத்த மருத்துவ மற்றும் நிர்வாக அதிகாரிகள் வியாழக்கிழமை பார்வையிட்டனர். உள்ளூர் எம்எல்ஏ கைலாஷ் நாத் சுக்லா துக்கமடைந்த குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூர் அதிகாரிகளை சுக்லா கேட்டுக் கொண்டார்.