தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களிலும் மேற்கும் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மட்டுமல்லாது பரவலாக மழைபெய்து வருகிறது.
வானிலை மையத்தின் அறிவிப்பு படி நாளைதமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யகூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குதொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், நாளை மாவட்டத்தில் நாளை வால்பாறையில் உள்ள பள்ளிரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.