பெரும்பான்மையான இந்தியர்கள் எப்போதும் வீட்டில் தங்கத்தை வைத்திருப்பார்கள் என்பதும் தங்கத்தை வைத்திருப்பது தங்கள் பெருமை என்று நினைக்கும் இந்தியர்கள் ஏராளமானோர் உள்ளனர் என்பதும் தெரிந்ததே.
இதனால் இந்தியா ஒரு காலத்தில் ‘தங்கப் பறவை’ என்று அழைக்கப்பட்டது. ஆனால் தங்கம் மீது இந்தியர்களுக்கு அதிக விருப்பம் இருந்தாலும் அதை வீட்டில் வைத்திருக்க ஒரு அளவுகோலும் உள்ளது.
அந்த அளவுகோல் என்ன என்பதை தெரிந்து வைத்து கொண்டால் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு பயப்படாமல் வீட்டில் நிம்மதியாக இருக்கலாம். அந்த அளவுகோல் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
தங்கம் விலை இவ்வளவு சரியுமா… எப்போது.. இன்று என்ன நிலவரம்?
இந்தியர்களும் தங்கமும்
உலகின் பெரும்பான்மையான தங்கத்தின் உரிமை இந்தியர்களிடம் இருப்பதாக நம்பப்படுகிறது. மதம் மற்றும் வகுப்பை பொருட்படுத்தாமல், ஒவ்வொரு இந்திய குடும்பத்திற்கும் இன்றியமையாத அங்கமாக தங்கம் உள்ளது. தங்கம் அதிகம் வைத்திருப்பதை குடும்ப பெருமையாகவும் கருதுகின்றனர்.
கலாச்சார உலோகம்
மற்ற நாடுகளில் தங்கம் ஒரு முதலீடாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில், தங்கம் என்பது வெறும் முதலீடு என்பதை விட இதயங்களில் கலந்த ஒன்றாகவும், கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த உலோகமாகவும் மாறியுள்ளது.
தங்க சட்ட வரம்பு
பெரும்பான்மையான இந்திய குடும்பங்கள் தங்கம் வாங்கினாலும், ஏற்கனவே சொந்தமாக வைத்து இருந்தாலும், எவ்வளவு தங்கம் வீட்டில் வைத்திருக்கலாம் என்ற சட்ட வரம்புகளை மக்கள் அறிந்திருக்க வேண்டும். இந்தியாவில் 1968ஆம் ஆண்டு தங்க கட்டுப்பாட்டு சட்டம் நிறுவப்பட்டு ஒவ்வொரு குடிமகனும் அதிகமாக தங்கம் வைத்திருப்பதை தடை செய்தது.
முறையான ஆதாரம்
ஆனால் இந்த சட்டம் 1990ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டபோது, தங்கத்தின் உரிமைக்கான உச்சவரம்பும் நீக்கப்பட்டது. இதன் விளைவாக, தங்கத்திற்கு முறையான ஆவணங்கள் இருந்தால் வைத்திருக்கக்கூடிய தங்கத்தின் அளவுக்கு வரம்பு இல்லை என கூறப்பட்டது.
மத்திய நேரடி வரிகள் வாரியம்
2016ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதியிட்ட மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) செய்திக் குறிப்பின்படி, எந்த அளவிலும் தங்க நகைகளை வைத்திருப்பதில் எந்த வரம்பும் இல்லை. முதலீடு அல்லது பரம்பரை ஆதாரத்தை நிரூபிக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை என்று CBDT தெளிவுபடுத்துகிறது.
பறிமுதல்
ஒருவர் எவ்வளவு தங்கத்தை வைத்திருந்தாலும் தங்கம் வைத்து இருப்பவரின் வருமானம் வைத்திருக்கும் தங்கத்தின் அளவுடன் ஒத்துப்போகிறதா? என்பதும் முக்கியமானது. வைத்து இருக்கும் தங்கத்திற்கு தேவையான ஆதாரத்தை வழங்குவதன் மூலம், வருமான வரிப் பிரிவின் சோதனையை தவிர்க்கலாம். ஆனால் ஒருவரிடமிருக்கும் தங்கத்திற்கு தேவையான ஆதாரம் இல்லையென்றால் பறிமுதல் செய்யும் அதிகாரம் மதிப்பீட்டு அதிகாரிக்கு உண்டு.
எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
இந்திய அரசின் விதிமுறைகளின்படி, திருமணமான பெண்கள் 500 கிராம் வரை தங்கம் வைத்திருப்பது சட்டப்பூர்வமானது. திருமணமாகாத பெண்கள் 250 கிராமுக்கு மேல் தங்கம் வைத்திருப்பது சட்டவிரோதமானது. அதேபோல் திருமணமானாலும், ஆகாவிட்டாலும், ஆண்கள் ஒவ்வொருவரும் 100 கிராம் தங்கம் வைத்திருக்கலாம்.
வருமான வரித்துறை
மேற்கூறிய வரம்புக்குள் தங்க ஆபரணங்களை வைத்திருந்தால், வருமான வரித்துறை அதிகாரிகளால் அது பறிமுதல் செய்யப்படாது. எளிமையாக சொன்னால், அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான தங்கத்தை ஒருவர் வீட்டில் வைத்திருந்தால், கூடுதல் தங்கம் வீட்டிற்குள் எப்படி வந்தது என்பதை அவர் நியாயப்படுத்த வேண்டும்.
How much gold can you own and keep at home? Details of limits and rules
How much gold can you own and keep at home? Details of limits and rules | வருமான வரித்துறைக்கு பயப்படாமல் எவ்வளவு தங்கம் வீட்டில் வைத்திருக்கலாம்?