கர்நாடகாவில் தண்ணீர் நிரம்பி வழியும் பாலத்தின் நடுவே தனியார் பேருந்து சிக்கியது. அதிர்ஷ்டவசமாக பேருந்திலிருந்த 50 பயணிகள் உயிர் தப்பினர்.
கர்நாடக மாநிலம் தும்கூரில் நிரம்பி வழியும் பாலத்தின் நடுவே 50 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சிக்கிய நிலையில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். தும்கூர் மாவட்டம் ஹிண்டுபுர பகுதியில் இருந்து 50 பயணிகளுடன் பாவகடா பகுதிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து தொம்மதாமரி கிராமம் அருகே உள்ள ஸ்ரீனிவாஷ்புரா ஏரி நிரம்பி கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள பாலத்தின் மேல் தண்ணீர் அதிகளவில் சென்றுகொண்டிருந்தது.
இந்நிலையில், பயணிகளுடன் வந்த தனியார் பேருந்து பாலத்தில் சென்று தண்ணீரில் நின்று விட்டது. பேருந்து அங்கிருந்து கிளம்ப முடியவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம மக்கள் கயிறு மூலம் பேருந்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஆபத்தில் இருந்து மீட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM