விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முக்கிய கேரக்டரின் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமந்தா ரூத் பிரபு தொடர்ந்து இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில்’ நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்து தனி நாயகியாக உருவெடுத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துன்னார்.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் தன்னை ஒரு தனி நடிகையாக நிலைநிறுத்திக் கொண்டுள்ள சமந்தா தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை குவித்துள்ளார். ஆனால் அவரின் வெற்றி சாதாரணமாக அவருக்கு கிடைத்துவிடவில்லை. இது தொடர்பாக சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊக்கமளிக்கும் உரையில், உரையாற்றிய சமந்தா, தான் ஒரு புகழ்பெற்ற நடிகையாக மாறுவதற்கு முன்பு தனது போராட்டங்களைப் பற்றிய நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது அவர் கூறுகையில்,
“நான் படிக்கும் போது என் அம்மாவும் அப்பாவும் என்னை நன்றாகப் படிக்கச் சொன்னார்கள், கஷ்டப்பட்டு படித்தேன். 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, கல்லூரியில் முதலிடம் பெற்றேன். ஆனால், நான் மேற்கொண்டு படிக்க ஆசைப்பட்டபோது, என் பெற்றோரால் படிக்க வைக்க முடியவில்லை. எனக்கு கனவுகள் இல்லை, எதிர்காலம் இல்லை, எதுவும் இல்லை. ஆனால் “உங்கள் பெற்றோர்கள் எதிர்பார்க்கும் பாதையில் நீங்கள் செல்ல வேண்டும் என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும்.
அதே சமயம் நீங்கள் கனவு காணுங்கள் என்று சொல்லத்தான் நான் வந்துள்ளேன். நீங்கள் எதை வேண்டுமானாலும் கனவு காணுங்கள், அதில் வெற்றி கிடைக்கும். சில சமயம் தோல்வியும் கிடைக்கும். அப்போது கடினமாக இருக்கும். ஆனால் நீங்கள் தொடர்ந்து முயறசி செய்துகொண்டே இருங்கள் அப்போதூன் நிலைத்திருக்க முடியும். என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் கடந்த காலத்தில் நிதி நெருக்கடியை எதிர்கொண்ட சமந்தா, தன் நிலையை உயர்த்திக்கொள்ள மிகவும் கடினமாக உழைத்ததாகவும், வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாகவும் கூறியுள்ள அவர், “நான் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிட்டேன். பல வேலைகளை செய்தேன். எனது விடா முயற்சியின் பலனாக நான் இன்று இங்கே இருக்கிறேன். என்னால் முடிந்தால் உங்களால் கண்டிப்பாக முடியும்!” மாணவர்கள் தான் இந்த நாட்டின் ஒரே எதிர்காலம் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil