தங்கம் விலையானது சமீபத்திய சரிவுக்கு பிறகு மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. குறைந்த விலையில் வாங்க வேண்டிய நல்ல வாய்ப்பினை மிஸ் செய்து விட்டோமோ என்ற குழப்பமும் இருக்கும்.
அப்படியானவர்கள் இன்னும் வாய்ப்பு இருக்கு என்பதற்கான பதிவு தான் இது.தங்கம் விலை ஏற்றத்திலேயே இருந்தாலும், தங்கம் விலையை ஆதரிக்க பல காரணிகள் சாதகமாக இருந்தாலும், தங்கம் விலையானது குறைய வாய்ப்பிருப்பதாகவும், இது டாலரின் அவுன்ஸூக்கு 1650 டாலர்களை தொடலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்திருக்கு.. இது வாங்க சரியான நேரமா.. நிபுணர்களின் கணிப்பு?
தங்கம் விலையில் தாக்கம்
முதல் காலாண்டில் சற்று சரிந்த தங்கம் விலையானது, இரண்டாவது காலாண்டில் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இது 2023ல் சற்று ஏற்றம் கண்டு மீண்டும் சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க, நிச்சயம் அதன் வட்டி விகிதத்தில் இறுக்கம் காட்டலாம். இது மேற்கொண்டு டாலரின் மதிப்பினை ஊக்குவிக்கலாம். இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
தற்போதைய நிலை?
கடந்த மார்ச் மாதத்தில் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு 2000 டாலர்களை எட்டியது. அதன் பிறகு சுமார் 11% சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் கடந்த சில அமர்வுகளாகவே பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையை பொறுத்து இனி வரும் மாதங்களில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சியில் தாக்கம்
அமெரிக்க பத்திர சந்தையின் பங்கும் இதில் உள்ளது எனலாம். ஏனெனில் இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம். எனினும் தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டி அதிகரிப்புக்கு மத்தியில் அது, பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம், இது ரெசசனுக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
தங்கம் விலை குறையலாம்
எனினும் மத்திய வங்கிகளின் வட்டி அதிகரிப்பு நடவடிக்கையினால், பணவீக்கம் என்பது கட்டுக்குள் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் எதிர்காலத்தில் கமாடிட்டிகளின் விலையும் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?
தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸுக்கு 11.65 டாலர்கள் அதிகரித்து, 1788.05 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளி விலை கிட்டத்தட்ட 1% அதிகரித்து 20.062 டாலராக அதிகரித்து காணப்படுகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்?
இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி, 10 கிராமுக்கு,457 ரூபாய் அதிகரித்து, 51,846 ரூபாயாக காணப்படுகின்றது. இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 364 ரூபாய் அதிகரித்து,57,918 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் விலை, வெள்ளி விலை சற்று அதிகரித்து காணப்படும் நிலையில், இது மேலும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 23 ரூபாய் அதிகரித்து, 4825 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 184 ரூபாய் அதிகரித்து, 38,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 23 ரூபாய் அதிகரித்து, 5264 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 42,112 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,640 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 20 பைசா அதிகரித்து. 63.20 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 632 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 63,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.48,250
மும்பை – ரூ.47,500
டெல்லி – ரூ.47,650
பெங்களூர் – ரூ.47,550
கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.48,250
gold price on 4th August 2022: Gold price may fall to $1650: What is the situation today?
gold price on 4th August 2022: Gold price may fall to $1650: What is the situation today?/தங்கம் விலை இவ்வளவு சரியுமா… எப்போது.. இன்று என்ன நிலவரம்?