இலங்கையில் பிரித்தானிய பெண்ணின் கடவுச்சீட்டு பறிமுதல்!


இலங்கைப் போராட்டங்களை ஆவணப்படுத்திய பிரித்தானிய பெண்ணின் கடவுச்சீட்டை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கையில் வாழும் பிரித்தானிய பெண் ஒருவர், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக போராட்டம் நடத்தும் ஆர்வலர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவருவதாக அவரது கடவுச்சீட்டை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஸ்காட்லாந்தின் செயின்ட் ஆண்ட்ரூஸைச் சேர்ந்த 34 வயதான கெய்லீ ஃப்ரேசர் (Kayleigh Fraser), செவ்வாயன்று அவரது வீட்டு வாசலுக்கு ஆறு குடிவரவு அதிகாரிகள் வந்து விசா நிபந்தனைகளை மீறியதாகக் கூறி தனது கடவுச்சீட்டை பறிமுதல் செய்ததாக கூறினார்.

அதிகாரிகள், தனது பாஸ்ப்போர்ட்டை ஒப்படைக்குமாறு கேட்டதாகவும், இல்லையெனில் தன்னை கைது செய்வதாகவும் எச்சரித்ததாக கூறினார்.

இலங்கையில் பிரித்தானிய பெண்ணின் கடவுச்சீட்டு பறிமுதல்! | Scotish Woman Passport Seized Sri Lanka Protests

அவரது ஆவணங்கள் திருப்பி கொடுப்பதற்கு முன் ஒரு விசாரணைக்காக 7 நாட்கள் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக கூறினார்.

இந்த சம்பவத்திற்கு முந்தைய நாள், தனக்கு விசா வழங்கிய நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு ஊழியரிடமிருந்து “பீதியடைந்த” தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதில், அதிகாரிகள் தன்னை விசாரித்து வருவதால், உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதாக ஃப்ரேசர் கூறினார்.

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.