புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நான்கு நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தடைந்தார். மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று மாலை டெல்லி வந்தடைந்தார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களை அவர் சந்தித்து பேசுகிறார். மேலும், பிரதமர் மோடியை சந்தித்து மாநில பிரச்னைகள் குறித்து விவாதிக்க இருக்கின்றார். 7ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார். கடந்த ஆண்டு நடந்த கூட்டத்தில் மம்தா பங்கேற்வில்லை. புதிய ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் மம்தா சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில், மம்தா டெல்லியில் இருக்கிறார். ‘திரிணாமுல் காங்கிரஸ் கட்சி துணை ஜனாதிபதி தேர்தலில் பங்கேற்காது. எதிர்கட்சிகள் தன்னிடம் ஆலோசிக்காமல் துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ததால் தேர்தலில் பங்கேற்பதில்லை,’ என்று மம்தா ஏற்கனவே கூறியுள்ளார்.