ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மாதம் 29ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதன் 3வது நாள் கூட்டத்தில் ஊழல் குறித்து விவாதிக்கக் கோரி அவையின் மையப் பகுதிக்கு சென்று முற்றுகையிட்ட பாஜ எம்எல்ஏ.க்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று காலை அவை கூடிய போது, கால்நடை கடத்தல்காரர்களால் பெண் போலீஸ் அதிகாரி சந்தியா டோப்னோ கொல்லப்பட்ட வழக்கில் நீதி கோரி பாஜ எம்எல்ஏ.க்கள் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். இதனால், அவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், அவை மீண்டும் கூடியபோது பேசிய சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் அலம்கிர் ஆலம், பாஜ எம்எல்ஏ.க்கள் 4 பேர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெறும்படி சபாநாயகர் ரவீந்திரநாத் மகதோவை கேட்டு கொண்டார். இதையடுத்து, அவர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு திரும்ப பெறப்பட்டது.