ரகுமான், கோவை
இ.பி.எஸ் பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போல் கட்சியை நடத்தி கொண்டிருப்பதாகவும் பன்னீர் செல்வம் பட்டாவோடு அதிமுகவை நடத்தி வருவதாக ஒபிஎஸ் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் விமர்சித்துள்ளார்.
அதிமுக பன்னீர்செல்வம் அணியின் கோவை மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான கோவை செல்வராஜ் தலைமையில் கோவையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு முன்னதாக அவினாசி சாலை அண்ணா சிலை சிக்னல் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை மாவட்டத்தை பொருத்தவரை, அதிமுகவின் கோட்டையாக எம்ஜிஆர் ஜெயலலிதா வைத்திரிந்த நிலையில், சென்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில், மாநகராட்சியில் படுதோல்வியை சந்திக்க வைத்தும், நகராட்சி, ஊராட்சி போன்றவற்றால் தோல்வியை பெற்று கொடுத்தவர்களுக்கு அதிமுகவில், இவர்கள் எல்லாம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆன காரணத்தினால் தான், கோவை மாவட்டத்தில் கட்சி அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதனை கட்டி காக்க அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் சைக்கிள் பேரணி நடத்த உள்ளோம்.
செப்டம்பரில், பன்னீர்செல்வம் தலைமையில் வ.உ.சி மைதானத்தில் பொது கூட்டம் நடத்த உள்ளோம். தற்போது உள்ள அதிமுக தலைமை என்பது, கடந்த 11ம் தேதி அவர்க்ள் நடத்திய பொதுக்குழு செல்லாத பொது குழு. அதில் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்ததும் செல்லவில்லை, அவரால் நியமிக்கப்பட்டதும் செல்லவில்லை, அவரால் நீக்கப்பட்டதும் செல்லவில்லை. இவர்கள் கூறியதை தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்கவில்லை என்பதால் இவர்கள் பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போல் கட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
பன்னீர்செல்வம் பட்டாவோடு அதிமுகவை நடத்தி வருகிறார். அதனால் தான் தேர்தல் ஆணைய கூட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டேன் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களாக அவர்கள் கலந்து கொண்டார்கள். எனவே அதிமுக என்பது ஒருங்கிணைபாளர் தலைமையில் உள்ள இயக்கம் தான். இவர்களுக்கு இன்னும் எவ்வித அங்கீகாரமும் அளிக்கப்படாததால் 72 பேரையும் கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறோம்.
அவர்களுக்கும் அதிமுகவிற்கும் சம்பந்தம் இல்லை. வருகின்ற 20ம் தேதிக்கு மேல் பன்னீர்செல்வம் ஒவ்வொரு மாவட்டமாக சுற்று பயணம் துவங்க உள்ளார். அதிமுக கட்சியே, தேர்தல் ஆணையத்தின் மூலமாக இரட்டை இலை, கட்சி, கட்சியின் கொடி என அனைத்தும் பன்னீர்செல்வமும் மதுசூதனனிடம் கொடுக்கப்பட்டது. 2017ல் இருந்த நிலைதான் தற்போதும் நீடிக்கிறது என கூறியுள்ளார்.
கோவையில் புதிய அலுவலகம் திறக்கப்படுமா என்ற கேள்விக்கு, பதில் அளித்த அவர், கட்சியின் அலுவலம் இங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் வாங்கியது கிடையாது, அலுவலகத்தை பி.எஸ்.ஜி நிறுவனத்தை சார்ந்த வரதராஜ் என்பவர் எம்ஜிஆர் இருக்கின்ற போது, இலவசமாக கொடுக்கப்பட்டது. இந்த ஒட்டுமொத்த அலுவலகமும் ஓபிஎஸ் தலைமையில் செயல்படுகிற போது, அனைத்து மாவட்டத்தில் உள்ள அலுவலகங்கள், அம்மா பெயரில் உள்ள டிரஸ்ட் சொத்துக்கள் அனைத்தும் நாங்கள் தான் நிர்வகிப்போம் என பதிலளித்தார்.
நாங்களே தனியாக அலுவலகம் வைத்து செயல்பட உள்ளோம். அதிமுகவில் 1 கோடியே 52 லட்சம் பேர் உறுப்பினர் கார்டு வாங்கி உள்ளனர், அதில் அனைவரும் அவர்கள் பக்கம் கிடையாது, அதிமுக தொண்டர்கள் நடுநிலை யோடு இருக்கிறார்கள். சம்பாதித்த பணத்தை பாதுகாப்பதற்காக முன்னாள் அமைச்சர்களை வைத்து கொண்டு எடப்பாடி செயல்பட்டு வருகிறார். அவர் போடும் டிராமா வெட்ட வெளிச்சம் ஆகின்ற பொழுது மக்களை ராஜபக்சேவை அனுப்பியதைப் போல தொண்டர்களே அவர்களை அதிமுகவில் இருந்து விரட்டி அடிப்பார்கள்.
கோவை மாவட்டத்தில் நகராட்சி ஊராட்சி மாநகராட்சி 100 வார்டுகளிலும் ஒரு வார காலத்திற்குள் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். பின்னர் தெளிவாக அதிமுகவை நடத்துவோம். அவர்கள் மீண்டும் ஒரு தேர்தல் நடத்துவதாக கூறுவது எடுபடாது. ஜெயக்குமார் சும்மா பேசி கொண்டிருந்தார். அவரை அடக்கியதில் இருந்து அவர் பேசுவதில்லை. இனிமேல் பேசுவார் என்றால், அவரை அடக்கும் வார்த்தைகள் அதிகம் உள்ளது, அவரது தவறுகள் பல உள்ளது,
மீன்கள் வளர்த்தாமலேயே 12 கோடிக்கு மீன்குஞ்சுகள் வாங்கி விட்டதாக கூறினார், இதில் இருந்து 5 வருடத்தில் 60 கோடி ரூபாய் சம்பாதித்த பணத்தை அவர் அரசாங்கத்திற்கு திருப்பி தர வேண்டியிருக்கும். அப்போது காவல்துறைக்கு பொறுப்பாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி வாக்கிடாக்கி வாங்கியதற்கு ஜெயக்குமார் பதில் சொல்ல வேண்டும். 3 மாதத்தில் தொண்டர்கள் உள்ள கட்சியை ஓபிஎஸ் நடத்துவார், குண்டர்கள் கொண்ட கட்சியை அவர்கள் நடத்துவார்கள்.
ஊழல் பட்டியல் பல கொடுக்கப்பட்டுள்ளது. விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது, தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவித்து ஆக வேண்டும் சிறைக்கு செல்வதை யாரும் தடுக்க முடியாது. பன்னீர் செல்வம் நடத்துவது தான் அதிமுக, பாஜக தோழமை கட்சி தானே தவிர பாஜக சொல்வதை கேட்டு செயல்பட வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை. மத்திய அரசு வேறு பாஜக கட்சி வேறு, மத்திய அரசு என்பது மக்கள் தங்கள் பிரச்சனைக்கு பிரதமரை அணுகுவது, பாஜக என்பது எங்களை போன்று கட்சி. ஓபிஎஸ் தான் பிரதமரை விமான நிலையத்தில் அனுப்பி வைக்க சென்றார், அப்போது உடல் நிலை சரியில்லாத காரணத்தினாலும் கோவிட் பரவலாலும் அவர் டெல்லி செல்லவில்லை என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil