தைவானை சுற்றி வளைத்து சீனா போர் பயிற்சி! ஏவுகணைகள் ஜப்பானில் விழுந்ததால் பதற்றம்… புகைப்படங்கள்


தைவானுக்கு எதிராக சீனா ராணுவம் போர் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், சீனாவின் ஏவுகணைகள் ஜப்பான் நாட்டிற்குள் விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சீனாவுக்கும், தைவானுக்கும் இடையேயான தூரம் 100 மைல்கள்தான். சீனாவிடம் இருந்து பிரிந்துவிட்ட நிலையில் தன்னை தனிநாடாக தைவான் கருதினாலும், சீனா அப்படி நினைக்கவில்லை.

தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொள்ள சீனா துடித்துக்கொண்டிருக்கிறது.
இந்த பிரச்சனையில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது.
இந்த நிலையில் தைவானைச் சுற்றிலும் சீனா முற்றுகையிட்டு போர் பயிற்சியை தொடங்கியது.

தைவானை சுற்றி வளைத்து சீனா போர் பயிற்சி! ஏவுகணைகள் ஜப்பானில் விழுந்ததால் பதற்றம்... புகைப்படங்கள் | China Missiles Landed In Japan Taiwan

AFP Twitter

இந்தப் போர் பயிற்சி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என தகவல்கள் கூறுகின்றன. தைவான் நாட்டின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு கடற்கரையையொட்டிய பகுதிகளில் சீனா அதிநவீன் ‘டாங்பெங்’ ஏவுகணைகளை வீசி சோதித்து வருகிறது.

இந்த நிலையில் சீனா நாட்டின் ஏவுகணைகள் ஜப்பான் நாட்டிற்குள் விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தைவான் எல்லையில் இருந்து சீனா வீசிய 9 ஏவுகணைகளில் ஐந்து ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நோபோ கிஷி தெரிவித்துள்ளார்.

இது ஜப்பான் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் குடிய மக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.  

தைவானை சுற்றி வளைத்து சீனா போர் பயிற்சி! ஏவுகணைகள் ஜப்பானில் விழுந்ததால் பதற்றம்... புகைப்படங்கள் | China Missiles Landed In Japan Taiwan

China’s Eastern Theatre Command/Handout via Reuters



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.