இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) ரெப்போ விகித உயர்வு குறித்த முடிவை இன்று அறிவித்து உள்ளது.
அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கியான ஆர்பிஐ இந்தியாவில் இருக்கும் அதிகப்படியான பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது.
நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.40 சதவீதமாக அறிவித்துள்ளார் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்.
Aug 5, 2022 10:29 AM
2023 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் – ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 5, 2022 10:29 AM
2வது காலண்டில் பணவீக்கம் 7.1 சதவீதமாகவும், 3வது காலண்டில் பணவீக்கம் 6.4 சதவீதமாகவும், 4வது காலண்டில் பணவீக்கம் 5.8 சதவீதமாகவும் – ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 5, 2022 10:29 AM
இந்தியாவின் 10 வருட பத்திரத்தின் லாபம் 7.20 சதவீதமாக உயர்வு
Aug 5, 2022 10:21 AM
2023ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2 சதவீதமாகவே இருக்கும் – ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 5, 2022 10:21 AM
ஜிடிபி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை –
Aug 5, 2022 10:21 AM
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் ஜிடிபி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை
Aug 5, 2022 10:20 AM
2022-23 ஆம் நிதியாண்டில் 3வது முறையாக வட்டி விகிதம் உயர்வு
Aug 5, 2022 10:20 AM
ரெப்போ விகிதம் இன்றைய உயர்வுடன் ஆகஸ்ட் 2019 அளவை எட்டியது
Aug 5, 2022 10:20 AM
மார்ச் 2019ல் இருந்த 21 சதவீத External debt to GDP ratio மார்ச் 2022 ல் 19.9 சதவீதமாக சரிவு – ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 5, 2022 10:20 AM
நடப்பு நிதியாண்டில் 13.3 பில்லியன் டாலர் இந்திய சந்தையில் இருந்து வெளியேறியுள்ளது
Aug 5, 2022 10:16 AM
ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்வு – ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 5, 2022 10:16 AM
SDF விகிதம் 5.15 சதவீதத்தில் இருந்து 5.65 சதவீதம் உயர்வு – ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 5, 2022 10:16 AM
வங்கி விகிதமான MSF 5.65 சதவீதமாக உயர்வு – ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 5, 2022 10:15 AM
சர்வதேச சந்தை பாதிப்பால் இந்தியா முதலீடு சந்தை அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது – ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 5, 2022 10:15 AM
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் MPC கொள்கை முடிவுகளை வெளியிடுகிறார்
Aug 5, 2022 10:15 AM
நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) ரெப்போ விகித உயர்வு குறித்த முடிவை இன்று அறிவிக்கும்
Aug 5, 2022 10:15 AM
புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதம் உயர்த்தப்படலாம்
Aug 5, 2022 10:15 AM
ரஷ்யா-உக்ரைன் போர், சீனா மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய தைவான் நெருக்கடிகள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது
Aug 5, 2022 10:15 AM
ஆர்பிஐ இன்றைய முடிவில் 35 அடிப்படை புள்ளிகள் (bps) முதல் 50 bps வரையிலான ரெப்போ விகிதத்தை உயர்த்தும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது
Aug 5, 2022 10:15 AM
ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை உயர்த்தினால் நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து இது மூன்றாவது உயர்வாக இருக்கும்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
RBI MPC live updates, Sensex Nifty live today on 05 august 2022: rbi policy rate hike titan
RBI MPC live updates, Sensex Nifty live today on 05 august 2022: rbi policy rate hike titan ஆர்பிஐ கொள்கை முடிவுகள் எதிரொலி.. சென்செக்ஸ் குறியீடு 130 புள்ளிகள் உயர்வு..!