சர்வதேச அரசியலில் அசத்தும் இந்தியர்கள்.. அட இத்தனை பேரா..?

இந்தியர்களையும் அரசியலையும் எப்போதும் பிரிக்க முடியாது என்பதும் பல நூற்றாண்டாக இந்தியர்கள் அரசியலை மிக நுணுக்கமாக ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே.

அரசர் காலத்திலிருந்து அரசியல் என்பது இந்தியர்களின் உணர்வுகளில் ஒன்றாக இருந்துவருகிறது. இந்த நிலையில் இந்தியர்கள் இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளிலும் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் முதல் இந்தியாவை 200 ஆண்டுகளுக்கு மேல் அடிமைப்படுத்திய பிரிட்டனின் அடுத்த பிரதமராக வர வாய்ப்பு உள்ள ரிஷி சுனக் வரை பல இந்தியர்கள் சர்வதேச அரசியலில் சாதனைகளை செய்து வருகின்றனர். அவ்வாறு சர்வதேச அரசியலில் அசத்தும் இந்தியர்களில் 7 பேர் குறித்து தற்போது பார்ப்போம்.

இந்தியா-வை முந்திய பங்களாதேஷ் நிலைமை இப்போ என்ன தெரியுமா..? 3 மாதம் மட்டுமே..!

 1. அன்டோனியோ கோஸ்டா

1. அன்டோனியோ கோஸ்டா

போர்ச்சுகல் நாட்டின் 119வது மற்றும் தற்போதைய பிரதமர் அன்டோனியோ கோஸ்டா ஒரு இந்தியர் ஆவார். மொசாம்பிக்கில் பிறந்த அவரது தந்தை கோவாவை சேர்ந்தவர். இவர் ஒரு பிரபல எழுத்தாளர் மட்டுமின்றி ரவீந்திரநாத் தாகூரின் கொள்கையை கடைபிடிப்பவர். போர்ச்சுகல் தலைநகரின் மேயராக பணியாற்றி படிப்படியாக அரசியலில் முன்னேறி தற்போது அந்நாட்டின் பிரதமர் ஆகியுள்ளார்.

2. கமலா ஹாரிஸ்

2. கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் 49வது மற்றும் தற்போதைய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ், ஓக்லாந்தில் தனது தமிழ் தாய் ஷியாமளா கோபாலன் மற்றும் ஜமைக்கா தந்தை டொனால்ட் ஹாரிஸ் ஆகியோருக்கு பிறந்தவர். அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

3. லியோ வரத்கர்
 

3. லியோ வரத்கர்

அயர்லாந்து நாட்டின் அரசியல்வாதியான லியோ வரத்கர் 2017-2020 வரை அந்நாட்டின் பிரதமர் பதவியில் இருந்தார். இவர் பாதி இந்தியர் மற்றும் பாதி அயர்லாந்தை சேர்ந்தவர். இவரது தந்தை 1960களில் பம்பாயிலிருந்து அயர்லாந்திற்கு சென்று மருத்துவராக பணிபுரிந்தார். இவரது தாயார் அயர்லாந்து நாட்டின் செவிலியராக பணிபுரிந்தவர்.

4. பிரிதி படேல்

4. பிரிதி படேல்

2019ஆம் ஆண்டில் பிரிட்டனின் கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் உள்துறை செயலாளர் என்ற பதவியை பெற்ற முதல் இந்திய வம்சாவளி என்ற பெருமையை பிரிதி படேல் பெற்றார். இவரது தாத்தா பாட்டி குஜராத்தை சேர்ந்தவர்கள். பிரிட்டனில் குடியேற்ற அமைப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இவர் முன்மொழிந்ததால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

 5. பிரியங்கா ராதாகிருஷ்ணன்

5. பிரியங்கா ராதாகிருஷ்ணன்

சென்னையை பூர்வீகமாக கொண்ட பிரியங்கா ராதாகிருஷ்ணன், நியூசிலாந்தின் சமூகம் மற்றும் தன்னார்வ துறை அமைச்சராக உள்ளார். இவர் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்து பின்னர் நியூசிலாந்திற்கு மேல்படிப்புக்காக சென்றார். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நியூசிலாந்தில் பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை கொண்டு வந்தவர்.

6. ரிஷி சுனக்

6. ரிஷி சுனக்

இங்கிலாந்தின் முன்னாள் நிதியமைச்சரான ரிஷி சுனக், அந்நாட்டின் பிரதமர் பதவிக்கு கடுமையான போட்டியில் உள்ளார். இந்தியாவை 200 ஆண்டுகளுக்கும் மேலாக அடிமையாக வைத்திருந்த பிரிட்டனின் அடுத்த பிரதமராகும் அதிக வாய்ப்பை பெற்றுள்ளார்.

7. பிரவிந்த் ஜக்நாத்

7. பிரவிந்த் ஜக்நாத்

2017 ஆம் ஆண்டு முதல் மொரிஷியஸ் நாட்டின் பிரதமராக பணியாற்றி வரும் பிரிவிந்த் ஜக்நாத், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவருடைய மூதாதையர்கள் உத்தரபிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் உள்ள ராஸ்ரா என்ற பிரிவை சேர்ந்தவர்கள். மொரிஷியஸ் நாட்டில் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்து அந்நாட்டு மக்களின் பாராட்டுக்களை தொடர்ந்து பெற்று வருகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

7 Indian-origin politicians around the world

7 Indian-origin politicians around the world | சர்வதேச அரசியலில் அசத்தும் இந்தியர்கள்.. அட இத்தனை பேரா..?

Story first published: Friday, August 5, 2022, 10:07 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.