அமெரிக்க அதிபர் மாளிகையான வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை எப்போதும் பலத்த பாதுகாப்புடன் காணப்படும். இதைச் சுற்றியுள்ள பகுதிகள் எப்போதும் மிக பிஸியாக இருக்கும். குறிப்பாக வெள்ளை மாளிகையின் வடக்கே 7 ஏக்கரில் Lafayette Square என்ற பூங்கா அமைந்துள்ளது. இது பொதுமக்கள் வருகையால் பிஸியான பகுதியாக இருக்கிறது. அதுவும் கோடைக் காலங்களில் கூட்டம் நிரம்பி வழியும்.
இந்த சூழலில் நேற்று மாலை அதிபரின் குடியிருப்பு மற்றும் அலுவலகம் அருகே உள்ள பகுதியில் திடீரென வானிலிருந்து மின்னல் வெட்டியுள்ளது. அப்போது நல்ல மழை பெய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உடனே பூங்காவில் இருந்த பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேறினர். இருப்பினும் அங்குள்ள மரத்தின் அருகே நின்றிருந்த பொதுமக்கள் மீது மின்னல் தாக்கியதில் சிலர் பலத்த காயமடைந்தனர்.
உடனே ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து காயம்பட்ட நபர்களை அழைத்து சென்றனர். இவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தைவானை சீண்டும் சைனா..! – ஏவுகணை வீசியதால் பதற்றம் ..!
இதுதொடர்பாக வாஷிங்டன் தீயணைப்பு மற்றும் அவசரநிலை துறை சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெள்ளை மாளிகையை ஒட்டிய பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆம்புலன்ஸ்கள், போலீசார் வாகனங்கள் என அப்பகுதி மிகுந்த பரபரப்புடன் காட்சி அளிக்கிறது. மின்னல் தாக்கிய சம்பவம் குறித்து பேசிய தீயணைப்பு மற்றும் அவசரநிலை துறையின் செய்தித் தொடர்பாளர் வைடோ மேக்கியோலா, விபத்து நிகழ்ந்த உடனே விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
4 பேரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் யார் என்று விசாரணை நடந்து வருகிறது. இடி, மின்னல் ஏற்படும் போது பொதுமக்கள் யாரும் மரத்திற்கு அடியில் நிற்க வேண்டாம். வீடுகளுக்குள் பாதுகாப்பாக தஞ்சமடைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.