NRI-களுக்கு ஜாக்பாட்.. ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு.. யாருக்கெல்லாம் நன்மை..?!

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பணவீக்க அச்சத்தால் அடுத்தடுத்து தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயத்தி வந்த நிலையில் இன்று இந்திய ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கை முடிவில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் 2022-23 ஆம் நிதியாண்டில் 3வது முறையாக வட்டி விகிதம் உயர்த்தியுள்ளார். ரெப்போ விகிதம் இன்றைய உயர்வுடன் ஆகஸ்ட் 2019 அளவை எட்டியுள்ளது, அதாவது கொரோனா தொற்றுக்கு முந்தைய நிலையை அடைந்துள்ளது.

சக்திகாந்த தாஸ் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் முக்கியமான நிதியியல் சேவை திட்டத்தின் அறிமுகம் குறித்து வெளியிட்டார்.

முகேஷ் அம்பானி, அனில் அம்பானி வீட்டின் எலக்ட்ரிக் பில் எவ்வளவு தெரியுமா? மலைக்க வைக்கும் தகவல்!

என்ஆர்ஐ குடும்பங்கள்

என்ஆர்ஐ குடும்பங்கள்

சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளில் அதிகம் வசிக்கும் நாட்டவர்களில் இந்திய முதன்மையாக இருக்கும் நிலையில் ஆர்பிஐ என்ஆர்ஐ-களுக்கு முக்கியமான சேவையை அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் என்ஆர்ஐ குடும்பங்களுக்குப் பெரிய அளவில் உதவி செய்ய முடியும் வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

யூடிலிட்டி கட்டணங்கள்

யூடிலிட்டி கட்டணங்கள்

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பில் வெளிநாடுகளில் இருக்கும் NRI-கள் இந்தியாவில் அவர்களின் வீடு அல்லது பெற்றோர்கள், உறவினர் வசிக்கும் வீட்டிற்கான மின்சாரக் கட்டணம், தண்ணீர் கட்டணம் மற்றும் பிற அனைத்து யூடிலிட்டி கட்டணங்களை வெளிநாட்டில் இருந்துகொண்டே செலுத்தும் புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம்
 

பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம்

ஆர்பிஐ இந்தப் பேமெண்ட் சேவையைப் பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் வாயிலாக (BBPS) வாயிலாகச் செய்ய முடிவு செய்துள்ளது. இந்தியாவில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய இந்த BBPS கட்டமைப்பை தற்போது கிராஸ் பார்டர் பேமெண்ட் சேவைக்கும் பயன்படுத்த முடிவு செய்துள்ளது ஆர்பிஐ. சக்திகாந்த தாஸ் அறிவிப்பு பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

பிரச்சனை

பிரச்சனை

குறிப்பாக இந்தியாவில் பில் பேமெண்ட் அனைத்தும் ரூபாய் வாயிலாகத் தான் ஏற்றுக்கொள்ளப்படும், என்ஆர்ஐ-கள் எப்படிப் பிற நாட்டு நாணயத்தில் பேமெண்ட் செய்வார்கள். சரி வேலெட் உருவாக்கப்பட்டுப் பிற நாட்டு நாணயத்தை ரூபாயாக மாற்றிப் பேமெண்ட் செய்வதாக வைத்துக் கொண்டாலும், இந்தியாவில் பல வங்கிகள், நிதி நிறுவனங்கள் நாணய மாற்றத்தில் பெரும் தொகையைக் கமிஷனாகப் பெற்று வருகிறது. இந்தச் சேவை மூலம் இந்தப் பிரிவு வர்த்தகத்தில் இருப்பவர்கள் அனைவரும் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

RBI Big Announcement NRI can pay electricity, phone bills of families in India directly via Bharat Bill Payment System

RBI Big Announcement NRI can pay electricity, phone bills of families in India directly via Bharat Bill Payment System NRI-களுக்கு ஜாக்பாட்.. ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு.. யாருக்கெல்லாம் நன்மை..?!

Story first published: Friday, August 5, 2022, 14:12 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.