இந்திய ரிசர்வ் வங்கியானது இன்று மீண்டும் ரெபோ விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேசமயம் செய்யப்பட்ட முதலீடுகளின் நிலைமை குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தினை கட்டுப்படுத்த மத்திய வங்கியானது, கடந்த மே மாதத்தில் இருந்து மூன்றாவது முறையாக வட்டி விகிதத்தினை 140 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.
4 வங்கிகளில் பண எடுக்க கட்டுப்பாடு.. ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை
கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டிய வட்டி?
இதனால கொரோனாவுக்கு முந்தைய வட்டி அளவினை எட்டியுள்ளது. இதே தேவையினை கட்டுப்பத்தினாலும், பணவீக்கத்தினையும் கட்டுப்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இன்று காலை நிலவரப்படி சென்செக்ஸ் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. முடிவில் பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும் சற்று ஏற்றத்தில் தான் முடிவடைந்துள்ளது.
முதலீடுகளில் தாக்கம்?
ஆர்பிஐயின் இந்த வட்டி அதிகரிப்பால் முதலீடுகளில் எந்த மாதிரியான தாக்கம் இருக்கும், குறிப்பாக ரியல் எஸ்டேட், பத்திர சந்தை, வங்கி வைப்பு நிதி உள்ளிட்டவை எப்படி இருக்கும். நிபுணர்கள் என்ன சொல்கின்றனர் வாருங்கள் பார்க்கலாம்.
வங்கிகள் குறிப்பாக அதன் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இது வங்கி பிக்ஸட் டெபாசிட் செய்பவர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடன்களுக்கான வட்டி விகிதத்தினை பல வங்கிகளும் உயர்த்தியுள்ளன.
எதிர்பார்த்தது இது தான்?
இது குறித்து ஜியோஜித் ஃபைனான்ஷியல் சேவை நிறுவனம், ரிசர்வ் வங்கி 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இது 35 புள்ளிகள் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் 15 அடிப்படை புள்ளிகள் அதிகமாகவே அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பொருளாதாரத்தில் சற்று தாக்கத்தினை ஏற்படுத்தலாம். எனினும் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வரும். எனினும் பங்கு சந்தையில் இன்று நேர்மறையான தாக்கமே இருந்தது. வட்டி விகிதத்தினையும் தாண்டி பொருளாதாரம் மீண்டும் வரும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
வீட்டுக் கடன் வாடிக்கையாளர்?
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால் குறுகிய காலத்தில் ரியல் எஸ்டேட் துறையில் சரிவு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தேவையில் பாதிப்பினை ஏற்படுத்தலாம். இதனால் மாநில அரசுகள் வரி விகிதத்தினை வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல் எஸ்டேட்டில் தாக்கம் இருக்கலாம்
வீடுகளின் விலைகள் மத்திய வங்கியின் முடிவால் அதிகரிக்கலாம். குறிப்பாக மெட்ரோ நகரங்களில் இது தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது ரியல் எஸ்டேட் துறையில் கணிசமான தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
சர்வதேச அளவில் நிலவி வரும் சாதகமற்ற நிலைக்கு மத்தியில், பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர வட்டி அதிகரிப்பினை மேற்கொண்டுள்ளது. இது பத்திர சந்தையில் மீண்டும் 7.10 – 7.40 என்ற விகிதத்தில் இருக்கலாம். அரசு பத்திரங்களின் லாபம் அதிகரிக்கலாம். சர்வதேச பத்திர சந்தையிலும் ஏற்றம் இருக்கலாம்.
மாத தவணை அதிகரிக்கும்
அதேசமயம் வாகனக் கடன், வீட்டுக் கடன், தனி நபர் கடன் என பல கடன் களுக்கும் வட்டி அதிகரிக்கலாம். இதனால் இனி மாத தவணை அதிகரிக்கலாம். இது ஏற்கனவே கடன் வாங்கியவர்கள், புதிய தாக கடன் வாங்குபவர்கள் என பலரின் மத்தியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
RBI hikes Repo rate again today: here’s what it means for your investments
RBI hikes Repo rate again today: here’s what it means for your investments/ரெபோ விகிதம் அதிகரிப்பு.. உங்கள் முதலீடுகள், கடன் என்னவாகும்?