புதுடில்லி: மத்திய அமைச்சரவை செயலாளரான ராஜிவ் கவுபாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை செயலாளராக இருப்பவர் ராஜிவ் கவுபா. இவரது பதவிக்காலம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நீட்டிப்பு பதவிக்காலமும் முடிவடைய உள்ள நிலையில் தற்போது மேலும் ஓராண்டுக்கு பணியை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
1982ம் ஆண்டு ஜார்க்கண்ட் பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜிவ் கவுபா, முன்னதாக மத்திய உள்துறை செயலாளராக பதவி வகித்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு மத்திய அமைச்சரவை செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஒருங்கிணைந்த காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்திருந்தார்.
புதுடில்லி: மத்திய அமைச்சரவை செயலாளரான ராஜிவ் கவுபாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய அமைச்சரவை செயலாளராக இருப்பவர் ராஜிவ் கவுபா. இவரது பதவிக்காலம் கடந்த
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்