சென்னை: ஈரோட்டில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஈரோடு போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழா நடத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும் புத்தகத் திருவிழாவிற்கு 1,500 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.