திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் போலி ஆவணம் தயாரித்து 54 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஆசிரியை மற்றும் அவரது சகோதரியையும் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை லீனா, ஆசிரியர்களுக்கு கடன் வழங்குவதற்காக செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கத்தின் செயலி மூலம் சக ஆசிரியர்களின் வங்கிக் கணக்குகளின் தகவல்களை சேகரித்துள்ளார்.
பின்னர், ஆசிரியர்களின் புகைப்படம், கையெழுத்து உள்ளிட்ட போலி ஆவணங்கள் மூலம் கூட்டுறவு சங்கத்தில் 54 லட்சம் ரூபாய் மோசடியாக கடன் பெற்ற நிலையில், கடன் தொகை குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது. இதில், பாதிக்கப்பட்ட ஆசிரியர் பேச்சியப்பன் கொடுத்த புகாரின்பேரில் ஆசிரியை லீனா மற்றும் அவரது சகோதரியையும் போலீசார் கைது செய்தனர்.