அஜித் 30 ஆண்டு கொண்டாட்டம் : கடலுக்கு அடியில் பேனர் கட்டிய ரசிகர்கள்!
வலிமை படத்தை அடுத்து மீண்டும் எச்.வினோத் இயக்கும் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கும் இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் அஜித்.
இந்த நிலையில் அஜித் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆனதையொட்டி அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக புதுச்சேரியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் இந்த கொண்டாட்டத்தை கடலுக்கு அடியிலும் நடத்தி உள்ளார்கள். அதாவது கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவிங் மூலம் 100 அடி ஆழத்திற்கு சென்று அஜித்தின் பேனர்களை வைத்துள்ளார்கள். அது குறித்த ஒரு வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் அமோகமான வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.