எட்டாவது நாள் முடிவில் 9 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது இந்தியா!
Women’s hockey: ஆஸ்திரேலியாவிடம் அரையிறுதியில் இந்தியா தோல்வி. முழு நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தனர்.
பின்னர் நடந்த பெனால்டி கார்னரில் ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது!
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நியூஸிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா!
Women’s Hockey – Ind vs Aus (SF) : வந்தனா கட்டாரியா கோல் அடித்து 1-1 என்று கோல் கணக்கை சமம் செய்துள்ளார்!
Women’s Hockey: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா 0-1 என்ற கோல் கணக்கில் பின்னடைவு! போட்டி முடிய இன்னும் 15 நிமிடங்கள் உள்ளது!
Table tennis, men’s singles: ஷரத், சத்யன், சனில் ஆகிய மூவரும் காலிறுதிக்கு தகுதி பெற்று அசத்தல்!
நாள் முழுதும் நிறைய டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடந்த நிலையில், இன்றைய தினத்தை சிறப்பாக முடித்து வைத்துள்ளனர்!
Table Tennis Women’s singles: மணிக்கா பாத்திர 0-4 என்ற கணக்கில் காலிறுதியில் தோல்வி!
Badminton, men’s doubles: சாத்விக் – சிராஜ் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது!
Athletics – women’s 200m semifinal: அரையிறுதியில் 200மீ தூரத்தை 23.42 நொடிகளில் கடந்தார் ஹீமா தாஸ். வெறும் 0.01 நொடி வித்தியாசத்தில் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தார்!
Squash Men’s doubles: 2-1 என்ற கணக்கில் அபய் சிங் – வேலவன் ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது!
மல்யுத்தத்தில் ஆறாவது பதக்கம்!
Wrestling – Men’s 125 kg: மோஹித் க்ரேவால் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் வெற்றி!
Badminton – Men’s singles: லக்ஷயா சென் காலிறுதிக்கு தகுதி!
Badminton – Women’s singles: ஆகர்ஷி கஷ்யப் காலிறுதிக்கு தகுதி!
Table Tennis Women’s singles – ஸ்ரீஜா அக்குலா 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்!
Squash, Women’s doubles – ஜோஷ்னா – தீபிகா ஜோடி காலிறுதியில் தோல்வி!
இந்தியாவுக்கு மல்யுத்தத்தில் ஐந்தாவது பதக்கம்!
Women’s Wrestling – 68 kg: வெண்கல பதக்கம் வென்றார் திவ்யா கக்ரன்!
லான் பவுல்ஸில் மற்றொரு பதக்கம் உறுதி!
Lawn Bowls – Men’s fours: அரையிறுதியில் 13-12 என்ற கணக்கில் இங்கிலாந்தை வென்றது இந்திய அணி! இதன்மூலம் வெள்ளிப் பதக்கத்தை உறுதிசெய்துள்ளது!
மல்யுத்தத்தில் மூன்றாவது தங்கப்பதக்கம்!
Men’s Wrestling – 86 kg: இறுதிப்போட்டியில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கபதக்கம் வென்றார் தீபக் புனியா!
காமன்வெல்த் போட்டிகளில் பஜ்ரங் புனியா!
2014 – வெள்ளி
2018 – தங்கம்
2022 – தங்கம்
காமன்வெல்த் போட்டிகளில் சாக்ஷி மாலிக்!
2014 – வெள்ளி
2018 – வெண்கலம்
2022 – தங்கம்
மல்யுத்தத்தில் இரண்டாவது தங்கப்பதக்கம்!
Women’s Wrestling – 62 kg: இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று தங்கப்பதக்கம் வென்றார் சாக்ஷி மாலிக்!
Table Tennis Men’s doubles : தமிழக வீரர்களான ஷரத் கமல் – சத்யன் ஞானசேகரன் ஜோடி அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தல்!
Wresting – Men’s 65 kg: பஜ்ரங் புனியாவிற்கு தங்கப்பதக்கம்!
இறுதிப்போட்டியில் 9-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இவர் 2018 காமன்வெல்த் போட்டிகளிலும் தங்கம் வென்றிருந்தார்!
Table Tennis Women’s doubles: ஸ்ரீஜா அக்குலா – ரீத் டென்னிசன் ஜோடி அடுத்த சுற்றுக்குத் தகுதி!
அன்ஷூ மாலிக்கிற்கு வெள்ளிப் பதக்கம்!
Wrestling – 57 kg Final : அன்ஷூ மாலிக் இறுதிப்போட்டியில் தோல்வி. வெள்ளிப் பதக்கம் வென்றார்!
Table tennis, Mixed doubles: ஷரத் கமல் – ஸ்ரீஜா அக்குலா ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தல்!
Table Tennis Mixed doubles: சத்யன் – மணிக்கா பாத்ரா ஜோடி காலிறுதியில் தோல்வி!
Table Tennis Men’s singles: காலிறுதிக்கான தகுதி சுற்றுக்கு தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் தகுதி பெற்றார்!
Lawn bowls , Men’s fours: இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்!
Wrestling – 68 kg: திவ்யா கக்ரன் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்குத் தகுதி!
Wrestling – 125 kg: அரையிறுதியில் மோஹித் க்ரேவால் தோல்வி. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாடுவர்!
மல்யுத்தத்தில் நான்கு பதக்கங்கள் உறுதி!
சாக்ஷி மாலிக், அன்ஷூ மாலிக், பஜ்ரங் புனியா, தீபக் புனியா இறுதிப்போட்டிக்கு தகுதி!
Wrestling – Men’s 125 kg: மோஹித் க்ரேவால் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
Badminton women’s singles – பி.வி.சிந்து 21-10, 21-9 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்!
Wrestling – Women’s 57 kg: சாக்ஷி மாலிக் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
Table Tennis Men’s singles: காலிறுதிக்கான தகுதி சுற்றுக்கு சனில் ஷெட்டி தகுதி பெற்றார்!
Wrestling – Women’s 57 kg: வெறும் 64 நொடிகளில் காலிறுதிப் போட்டியை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார் அன்ஷூ மாலிக்!
Badminton men’s singles: ஸ்ரீகாந்த் கடம்பி 21-9, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்!
Table Tennis Men’s singles: ஷரத் கமல் 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றார்!
Women’s doubles: த்ரீசா – காயத்ரி ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றார்!
Athletics, Women’s long jump – இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றில் அன்சி சோஜன் 13வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தார்!
Table Tennis – Women’s doubles: மணிக்கா பாத்ரா – தியா சிட்டாலே முதல் போட்டியில் வெற்றி!
Table Tennis – Men’s doubles : ஷரத் – சத்யன் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது!
Table Tennis – Men’s doubles : ஹர்மீத் – சனில் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது!
Table tennis, Women’s singles: காலிறுதிக்கான தகுதி சுற்றில் ரீத் டென்னிசன் தோல்வி!
Athletics Men’s 4x400m relay: இந்திய அணி 3:06.97 நிமிடத்தில் போட்டியை முடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி!
Table Tennis women’s singles: ஸ்ரீஜா அக்குலா 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்!
Women’s 100m hurdles: ஜோதீ யாராஜி 10வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்தார்!