முகேஷ் அம்பானி, அனில் அம்பானி வீட்டின் எலக்ட்ரிக் பில் எவ்வளவு தெரியுமா? மலைக்க வைக்கும் தகவல்!

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா என்ற பெயருள்ள வீடு மும்பையில் உள்ளது.

இந்த வீடு உலகின் மிக உயர்ந்த சொத்துக்களில் ஒன்று என்றும் இந்தியாவிலேயே மிக அதிகமான தனிநபர் சொத்து இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானியின் அரண்மனை வடிவில் உள்ள ஆண்டிலியா வீட்டி மதிப்பு 15 ஆயிரம் கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இதில் உயர்தரமான கலைப்பொருட்கள் ஒவ்வொரு மூலையில் உள்ள செழுமை, வண்ண வண்ண விளக்கூகல் ஆகிய தனித்துவமான அம்சங்களும் உள்ளன.

மஞ்சப்பை விற்பனையில் 3 கோடி வருமானம்.. மதுரையை கலக்கும் கிருஷ்ணன்- கௌரி..!

முகேஷ் அம்பானி வீடு

முகேஷ் அம்பானி வீடு

4 லட்சம் சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ள முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா இல்லத்தில் 27 தளங்கள் உள்ளன. அதில் மூன்று ஹெலிபேடுகள், ஆறு கார் பார்க்கிங், ஒரு கோயில், ஒரு திரையரங்கம். , ஒரு ஸ்பா, ஒரு ஐஸ்கிரீம் பார்லர் ஆகியவை உள்ளன.

9 லிப்டுகள்

9 லிப்டுகள்

8 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் வந்தால் கூட தாங்கும் அளவுக்கு இந்த மாளிகை திடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பது லிஃப்ட்கள் உள்ள இந்த வீட்டில் அம்பானி குடும்பத்தினர் பயன்படுத்தும் லிப்ட் போக, விருந்தினர்கள், பணியாளர்கள் செல்வதற்கு என தனித்தனி லிஃப்ட் உள்ளன.

பார்க்கிங்
 

பார்க்கிங்

168 கார்களை ஒரே நேரத்தில் பார்க்கிங் செய்யும் அளவுக்கு பரந்து விரிந்த பார்க்கிங் இந்த வீட்டில் உள்ளது. முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய மனைவி நீதா அம்பானி தங்கள் இரண்டு மகன்களான ஆனந்த் மற்றும் ஆகாஷ் ஆகியோர் இந்த வீட்டில் தங்கி உள்ளனர்.

எலக்ட்ரிக் பில்

எலக்ட்ரிக் பில்

இந்நிலையில் முகேஷ் அம்பானி தனது வீட்டிற்கு எவ்வளவு எலக்ட்ரிக் பில் கட்டுகிறார் என்பது ஒரு ஆச்சரியமான தகவலாகும். முகேஷ் அம்பானி தனது வீட்டிற்கு ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.70 லட்சம் எலக்ட்ரிக் பில் கட்டுவதாக தெரிகிறது. இவரது வீட்டில் மொத்தம் சுமார் 6 லட்சம் யூனிட்டுக்கள் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. மும்பையில் உள்ள 7000 வீடுகள் பயன்படுத்தும் மின்சாரத்தை இவரது குடும்பம் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அனில் அம்பானி

அனில் அம்பானி

அதேபோல் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி தனது வீட்டிற்கு சுமார் 60 லட்சம் மின் கட்டணம் செலுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Mukesh Ambani and Anil Ambani House Electricity Bill per month!

Mukesh Ambani and Anil Ambani House Electricity Bill per month! | முகேஷ் அம்பானி, அனில் அம்பானி வீட்டின் எலக்ட்ரிக் பில் எவ்வளவு தெரியுமா? மலைக்க வைக்கும் தகவல்!

Story first published: Friday, August 5, 2022, 13:44 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.