இந்திய டெலிகாம் துறையில் பெரு நகரங்கள் முதல் சிறு நகரங்களை வரையில் அனைவரும் டெலிகாம் சேவை வழங்கி இந்தியாவின் தொலைத்தொடர்பு சேவையை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்ற பிஎஸ்என்எல் இன்று இருக்கும் இடம் கூடத் தெரியாமல் உள்ளது.
அந்த அளவிற்குக் குறைவான வாடிக்கையாளர்களைக் கொண்டு உள்ளது இந்நிறுவனம், தனியார் நிறுவனங்கள் 2ஜி, 3ஜி, 4ஜி சேவைகளைத் தாண்டி 5ஜி சேவையை வழங்க ஸ்பெக்ட்ரம் கைப்பற்றியிருக்கும் வேளையில் பிஎஸ்என்எஸ் 2ஜி, 3ஜி சேவையிலேயே இருப்பது மட்டும் அல்லாமல் நிறுவனத்தைக் காப்பாற்ற மத்திய அரசிடமும் இருந்து பெரும் உதவி தொகையை வாங்கியுள்ளது.
இந்த நிலையில் தான் மத்திய டெலிகாம் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் BSNL ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
12 வயதில் 3 ஆப்… கின்னஸ் சாதனை செய்த சிறுவன்.. கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்க வாய்ப்பு!
பிஎஸ்என்எல்
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் டெலிகாம் சேவை நிறுவனமான BSNL தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாவிட்டாலும், நஷ்டத்தைக் குறைக்க வேண்டிய முக்கியமான இலக்கு உண்டு. மத்திய அரசு ஏற்கனவே அரசு விமானப் போக்குவரத்து நிறுவனத்தை டாடா-வுக்கு விற்பனை செய்து தனியார்மயமாக்கியது.
நீண்ட காலக் குத்தகை
இதைத் தொடர்ந்து வங்கிகளைத் தனியார்மயமாக்கும் திட்டத்தை ஆய்வு செய்து வருகிறது, இதோடு விமான நிலையம் முதல் பல அரசு சொத்துக்களை நீண்ட காலக் குத்தகைக்கு விடும் பணிகளும் மத்திய அரசு செய்து வருகிறது.
அஸ்வினி வைஷ்ணவ்
இந்த நிலையில் தான் அரசு டெலிகாம் நிறுவனங்களை மீண்டும் சிறப்பாகச் செயல்படும் நிலைக்குக் கொண்டு வர வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கான பணிகளை மத்திய டெலிகாம் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்து வருகிறார்.
பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு எச்சரிக்கை
இன்று பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு மத்திய டெலிகாம் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிவிப்பில் BSNL ஊழியர்கள் முதல் அரசு ‘சர்க்காரி’ அணுகுமுறை கைவிடுங்கள், வேலை செய்யாதவர்களைப் பணியில் இருந்து கட்டாய ஒய்வு அளிக்கப்படும் வீட்டுக்கு அனுப்பப்படும் என எச்சரித்துள்ளார்.
MTNL நிறுவனம்
மேலும் MTNL நிறுவனத்திற்கு எவ்விதமான எதிர்காலமும் இல்லை, அந்த நிறுவனத்திற்கு எங்களால் எதுவும் செய்ய முடியாது, அதனால் மாறுப்பட்ட நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டு உள்ளோம் எனவும் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இணைப்பு
சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (பிபிஎன்எல்)-ஐ மத்திய அரசுக்குச் சொந்தமான டெலிகாம் சேவை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) உடன் இணைக்க ஒப்புதல் அளித்தது உள்ளது.
62000 ஊழியர்கள்
இந்த இணைப்பு மூலம் இந்தியாவில் பிராண்ட்பேன்ட் சேவையை மிகப்பெரிய அளவில் மேம்படுத்த முடியும், இதற்குத் தேவையான ஊழியர்கள் எண்ணிக்கை அதாவது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சுமார் 62000 ஊழியர்கள் உள்ளனர். இவர்களை வைத்து பெரிய அளவில் சேவையையும் வாடிக்கையாளர்களையும் உயர்த்த முடியும்.
1,64,156 கோடி ரூபாய் உதவி
இதேபோல் BSNL வளர்ச்சிக்கு மத்திய அரசு 1,64,156 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் சரிவில் இருந்து மீண்டு வர புதிய உதவி தொகையை அறிவித்துள்ளது. வர்த்தகம், நிதியுதவி இரண்டும் ஓரே நேரத்தில் கிடைத்திருக்கும் நேரத்தில் ஊழியர்கள் மொத்தமான இருந்தால் கட்டாயம் வீழ்ச்சி அடையும்.
நல்ல வாய்ப்பு
இதனால் மத்திய டெலிகாம் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் எனத் தெரிகிறது. அஸ்வினி வைஷ்ணவ் எச்சரிக்கைக்கு மக்களாகிய உங்களின் கருத்து என்ன..? அவர் சொன்னது சரியா..? தவறா..? மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க..
BSNL Employees IF not performing forced to compulsory retirement says Ashwini Vaishnaw
BSNL Employees IF not performing forced to compulsory retirement says Ashwini Vaishnaw BSNL ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.. 1.64 லட்சம் கோடி கொடுத்த பின்பு அதிரடி அறிவிப்பு ஏன்..?