டில்லியில் போலீஸ் ஸ்டேசனுக்குள் புகுந்த போலீசை தாக்கிய கும்பல்| Dinamalar

புதுடில்லி: டில்லியில் உள்ள போலீஸ் ஸ்டேசன் ஒன்றில் வந்த சிலர், ஹெட் கான்ஸ்டபிள் மீது தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனந்த் விஹார் போலீஸ் ஸ்டேசனில் நடந்த இந்த சம்பவம் கடந்த ஜூலை 31ல் நடந்ததாக தெரிகிறது. ஆக.,3ல் நடத்ததாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

அந்த வீடியோவில், 12 பேர் கும்பல் போலீஸ் ஸ்டேசனுக்குள் புகுந்தனர். அதில் சிலர், போலீசை கடுமையாக தாக்கினர். அருகில் இருந்தவர்கள் அதனை தடுக்காமல் மொபைலில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். தாக்குதலுக்கு உள்ளான போலீஸ் விட்டுவிடும்படி கெஞ்சியும் அந்த கும்பல் கடுமையாக தாக்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தாக்குதலுக்கான காரணம் தெரியவரவில்லை. போலீஸ் ஸ்டேசனில் இருந்த மற்றொரு போலீஸ் படம்பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அது தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.