ஸ்டெர்லைட் ஆலை விற்பனை அறிவிப்பு.. வாங்குவதற்கு இத்தனை போட்டியா?

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை, அந்த பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக கிட்டத்தட்ட நிரந்தரமாக மூடப்பட்டது.

இந்த ஆலையை திறக்க பல்வேறு சட்ட நடவடிக்கை எடுத்த வேதாந்தா நிறுவனம், அதன்பின் திறப்பதற்கான வழியே இல்லை என்று தெரிந்தபின் சமீபத்தில் விற்பனை செய்வதாக அறிவித்தது.

இந்த நிலையில் வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால், ஸ்டெர்லைட்டை வாங்குவதற்கு 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடலால் எத்தனை ஆயிரம் கோடி நஷ்டம் தெரியுமா? அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு!

ஸ்டெர்லைட் போராட்டம்

ஸ்டெர்லைட் போராட்டம்

கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு எதிராக இருப்பதாக அந்த பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100 நாட்கள் நடந்த இந்தப் போராட்டம் 100வது நாளில் வன்முறை வெடித்தது என்பதும் அதனால் துப்பாக்கி சூடு செய்யப்பட்டதால் இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆலைக்கு சீல்

ஆலைக்கு சீல்

இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்து மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த ஆலையை மீண்டும் திறக்க நீதிமன்றங்கள் மூலம் வேதாந்தா நிறுவனம் பல்வேறு முயற்சிகள் செய்த போதிலும் இதுவரை ஆலையை திறப்பதற்கான சாதகமான அம்சங்கள் எதுவும் இல்லை.

 விற்பனை செய்ய முடிவு
 

விற்பனை செய்ய முடிவு

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க முடியாது என்று முடிவு செய்த வேதாந்தா நிறுவனம், அந்த ஆலையை விற்பனை செய்ய கடந்த ஜூன் மாதம் விளம்பரம் செய்தது.

10 பிரிவுகள்

10 பிரிவுகள்

ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உள்ள தாமிர உருக்கு வளாகம், தாமிர சுத்திகரிப்பு ஆலை, தொடர் தாமிர கம்பி ஆலை, கந்தக அமிலத் தொழிற்சாலை, பாஸ்பாரிக் அமில தொழிற்சாலை, ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு என 10 பிரிவுகளையும் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

7 நிறுவனங்கள்

7 நிறுவனங்கள்

ஸ்டெர்லைட் ஆலையை வாங்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தை வாங்குவதற்கு தற்போது 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் அவர்கள் கூறியுள்ளார்.

சீனா சதி

சீனா சதி

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதற்காக சீனாவிலிருந்து இந்திய அரசியல் கட்சிகளுக்கு பணம் அனுப்பப்பட்டதாகவும் ஆலையை மூட வேண்டுமென்ற போராட்டங்களுக்கு பின்னணியில் சீனாவின் சதி இருந்துள்ளதாகவும் பகிரங்கமாக வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் குற்றம்சாட்டி உள்ளார்.

போராட்டக்குழுவினர்களின் கருத்து

போராட்டக்குழுவினர்களின் கருத்து

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்கிறோம் என்ற போர்வையில் பினாமி கம்பெனியின் பெயரில் கூட மீண்டும் ஆலை இயங்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து தமிழக அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

We have got seven bids for Sterlite Copper plant: Vedanta’s Anil Agarwal

We have got seven bids for Sterlite Copper plant: Vedanta’s Anil Agarwal | ஸ்டெர்லைட் ஆலை விற்பனை அறிவிப்பு.. வாங்குவதற்கு இத்தனை போட்டியா?

Story first published: Saturday, August 6, 2022, 16:39 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.